டிசம்பர் 25, கிண்டி (Chennai News): கல்லூரிக்கு படிக்கச் சென்ற இடத்தில், காதலருடன் தனிமையில் இருந்த கல்லூரி மாணவியை மிரட்டி, நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் சென்னையை அதிரவைத்துள்ளது. படிக்கும் வயதில் காதல் வயப்படுவோர், தன்மையில் சந்திக்கும்போது, மூன்றாவது நபர் வந்தால், அவரை தைரியமாக எதிர்கொள்ள திராணி இல்லையென்றால், எந்த மாதிரியான விபரீதம் நடக்கும் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
19 வயது கல்லூரி மாணவி:
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் (Anna University), தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு மாணவ - மாணவிகளுக்கு என பிரத்தியேக விடுதி வளாகமும் இருக்கிறது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் கல்லூரியில், மெக்கானிக்கல் துறையில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர் பயின்று வருகிறார். 19 வயது மாணவிக்கு சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். மீன்பிடிக்கச் சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி பலி.. தவறி விழுந்தவரை காப்பாற்ற முயன்று அடுத்தடுத்து சோகம்.!
கல்லூரி மாணவியை நிர்வாணப்படுத்தி மிரட்டல்:
தற்போது மாணவி கல்லூரி விடுதி வளாகத்தில் தங்கியிருந்து பயின்று வருகிறார். இவருக்கு, அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இவர்கள் அவ்வப்போது பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் மறைவான இடங்களில் சந்தித்துக்கொண்டதாக தெரியவருகிறது. இரண்டு ஆண்டுகளாக இந்த பழக்கம் தொடங்கியுள்ளது. இதனிடையே, நேற்று முன்தினம் இருவரும் வழக்கம்போல தங்களின் சந்திப்பு இடத்தில் இருந்தனர். மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன? பரபரப்புக்கும் கண்டனம்.!
காவல் துறையினர் விசாரணை:
அப்போது, அங்கு வந்த 2 பேர் கொண்ட மர்ம நபர்கள், காதலனை மிரட்டி இருக்கின்றனர். பின் 19 வயது இளம்பெண்ணை நிர்வாணப்படுத்தி, வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். நிர்வாணமாக இளம்பெண்ணை படம்பிடித்த நபர்கள், பின் மிரட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர், உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி வளாகத்தில் இருக்கும் மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்தாரா? வெளி நபர்களோ? என விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3