Breaking: செந்தில் பாலாஜி, பொன்முடி பதவி விடுவிப்பு.. யாருக்கு எந்த துறை? முழு விபரம் உள்ளே.!
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் தங்களின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்கள் வசம் இருந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏப்ரல் 27, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 27, 2025) அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கும் முன்னதாக அமைச்சரவை கூட்டமும் நடைபெற்ற நிலையில், அதனைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிஉள்ளது. அதன்படி, அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் பொறுப்புகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளனர். 40 அடி உயர கரண்ட் வயரில் காத்திருந்த எமன்.. கூலித் தொழிலாளர்களுக்கு சர்ச்சில் நடந்த பயங்கரம்.!
அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு:
ஆளுநர் மாளிகை இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருவரின் பதவி விடுவிப்பு விஷயத்தை உறுதி செய்தது. முதல்வர் முக ஸ்டாலின் பரிந்துரை செய்ததன் பேரில் அமைச்சர்களின் பதவிகள் நீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல, போக்குவரத்து துறையை கவனித்து வந்த எஸ்.எஸ் சிவசங்கருக்கு மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கூடுதல் துறையாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேபோல, பொன்முடி வசம் இருந்த வனத்துறை கூடுதலாக அமைச்சர் ராஜகண்ணபண்ணுக்கு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. பதவி பறிப்பு செய்யப்பட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் தற்போதைய அமைச்சரவையில் மீண்டும் இடம்பெற்றுள்ளார். அவருக்கான பொறுப்பு விரைவில் அறிவிக்கப்படும்.
பதவி பறிப்பு ஏன்?
அமைச்சர் செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும்போது அரசு வேலை வாங்கித்தருவாக கூறி மோசடி செய்ததாக புகார் எழுந்து இதன்பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது திமுகவில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி இவ்வழக்கில் சிறையிலும் அடைக்கப்பட்டார். பின் ஜாமினில் வெளியே வந்த பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை நீதிமன்றமும் கண்டித்து இவ்வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது. இதனால் அமைச்சர் பதவிக்கு நீதிமன்றத்தால் முற்றுப்புள்ளி வைக்கும் முன் அவரே பதவி ராஜினாமா தொடர்பான விஷயத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.
பொன் பெயர் கொண்டவருக்கு வாயால் வந்த வம்பு:
கல்வித்துறை, வனத்துறைகளை முந்தைய காலங்களில் கையில் வைத்திருந்த பொன்முடி கலைஞரின் விழுப்புரத்து வளர்ப்பு என திமுகவில் போற்றப்பட்டவர். சமீபகாலமாக பெண்களுக்கு அரசு கொடுக்கும் திட்டத்தை வைத்து இழிவுபடுத்தி பேசுவது என ஒருசில சர்ச்சையில் சிக்கியவர், விபச்சார தொழில் செய்யும் பெண் ஒருவரை மையப்படுத்தி பட்டை-நாமம், சைவம்-அசைவம் என மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், பெண்கள் இருந்த பொதுக்கூட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் பேசினார். இந்த விஷயம் சர்ச்சையாகி உடனடியாக அவரின் கட்சிப்பதவி துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பு நேரடியாக திமுக தலைவர் & முதல்வர் முக ஸ்டாலினால் பறித்து உத்தரவிடப்பட்டது. தற்போது அமைச்சர் பொறுப்பிலும் இருந்து விடுவிக்கப்பட்டார்.