ஃபெஞ்சல் புயல்-வெள்ளம்: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000/- தமிழ்நாடு முதல்வர் அறிவிப்பு.. விபரம் இதோ.!
புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்த கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 03, தலைமை செயலகம் (Chennai News): சென்னை தலைமை செயலகத்தில், புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேற்கொள்ளப்படும் நிவாரண உதவிகள் குறித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், மீட்புப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
ரேஷன் அட்டைக்கு ரூ.2000:
அதனைத்தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு, ரேஷன் அட்டை தாரர்களுக்கு புயல்-வெள்ளம் காரணமாக ரூ.2000 வழங்கப்படும். புயல் வெள்ளத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.5 இலட்சம் இழப்பீடாகவும், வீடுகள் சேதம் அடைந்தோருக்கு ரூ.10 ஆயிரமும் இழப்பீடும், குடிசைகள் சேதம் அடைந்தோருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடாகவும் வழங்கப்படும். Tiruvannamalai Landslides: தி.மலை நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள், தம்பதி உட்பட 7 பேர் மரணம்.. குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோகம்..!
பயிர்களுக்கு இழப்பீடு:
மழை காரணமாக நெற்பயிர்கள் ஏக்கருக்கு 33% மேல் பாதிக்கப்பட்டு இருந்தால், ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும். மானாவாரி பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம், மாடு-பசு உயிரிழந்தால் ரூ.7 ஆயிரம், ஆடுகளுக்கு இழப்பீடாக ரூ.4000, கோழிக்கு ரூ.100 இழப்பீடு வழங்கப்படும்.
சிறப்பு முகாம் நடத்த உத்தரவு:
அடையாள அட்டை தொடர்பானவற்றை இழந்திருந்தால், சிறப்பு முகாம் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவ-மாணவிகள் புத்தகம், நோட்டுகளை இழந்திருந்தால், அவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கப்படும்.
மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்:
கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் தேவைப்படும் நிவாரணம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து விபரங்கள் தரலாம்.