TN Govt Annoucement: அம்மா உணவகத்தில் இலவச உணவு: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு.!
புயல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏழை-எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, இன்று அம்மா உணவகத்தில் இலவசமாக உணவுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30, தலைமை செயலகம் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கால் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டு, மணிக்கு 12 - 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. Chennai Local EMU Train: சென்னை புறநகர் இரயில் சேவைகள் குறைப்பு; தென்னக இரயில்வே அறிவிப்பு.!
அம்மா உணவகத்தில் (Amma Unavagam Free Food) இலவச உணவு:
இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகத்தில், இன்று ஒருநாள் முழுவதும் இலவசமாக உணவுகள் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புயல் காரணமாக கடந்த 5 மணிநேரத்திற்கு மேலாக கடும் மழை தொடங்கியுள்ள நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு உட்பட பிற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், களத்தில் மாநகராட்சி, தமிழ்நாடு அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.