நவம்பர் 30, எழும்பூர் (Chennai News): தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஃபெங்கால் புயலாக (Fengal Cyclone) வலுப்பெற்று இருக்கிறது. இந்த புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து 110 கிமீ தொலைவில் புயல் மையம் கொண்டு, மணிக்கு 12 - 13 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான இடங்களில் மீண்டும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, புறநகர் இரயில் சேவை இயக்கம் என்பது குறைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்கள் பயணம் செய்ய, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இரயில் சேவை குறைந்தளவு இயக்கப்படுவதாக தெரிவிப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - ஆவடி, கும்மிடிப்பூண்டி மார்க்கம் வழித்தடத்தில் இயக்கப்படும் இரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. Chennai Airport: ஃபெங்கால் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையம் மூடல்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இஎம்யு இரயில் செயல்பாடுகள் குறைக்கப்படுவதாக அறிவிப்பு:
Due to the heavy rain, EMU train services in all Suburban Sections in #Chennai Division will operate at reduced frequency intervals until further notice
This precautionary measure has been taken to ensure passenger safety during the cyclone.#CycloneFengal #chennairain pic.twitter.com/WdCFONJpGL
— Southern Railway () November 30, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)