மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன? பரபரப்புக்கும் கண்டனம்.!

“கல்வி உரிமைச்‌ சட்டத்தில்‌ மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால்‌ தமிழ்நாட்டுப்‌ பள்ளிகளின்‌ தேர்ச்சி முறையில்‌ எந்த மாற்றமும்‌ கிடையாது; தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்‌ என பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி விளக்கம்‌ அளித்துள்ளார்.

Anbil Mahesh | MK Stalin (Photo Credit: @ANI X)

டிசம்பர் 24, தலைமை செயலகம் (Chennai News): மத்திய அரசு ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நிலையை ரத்து செய்து, மாணவர்கள் கட்டாயம் கல்வி நிலையத்தில் நடைபெறும் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைய வேண்டும் என்ற விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த விஷயம் மாநில அளவில் ஆதரவு/எதிர்ப்பு நிலையை சந்தித்து இருக்கிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக அரசு விளக்கம் அடங்கிய குறிப்பையும் வெளியிட்டு இருக்கிறது.

தேர்ச்சி பெறாத குழந்தைகள் மீண்டும் அதே வகுப்பில்:

அந்த தகவலில், "தமிழ்நாட்டில்‌ அனைத்துப்‌ பள்ளிக்‌ குழந்தைகளும்‌ தொடர்ந்து தடையின்றி கல்வி பயின்றிட ஏதுவாக, எட்டாம்‌ வகுப்பு வரை கட்டாயத்‌ தேர்ச்சி வழங்கப்படும்‌ முறை தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்‌, கல்வி உரிமைச்‌ சட்டத்தின்‌ விதிகளைத்‌ திருத்தம்‌ செய்து, ஐந்து மற்றும்‌ எட்டாம்‌ வகுப்பு தேர்வுகளில்‌ தேர்ச்சி பெறாத குழந்தைகளுக்கு இரண்டு மாதங்களில்‌ மறுதேர்வு முறையையும்‌, அதிலும்‌ தேர்ச்சி பெறாத குழந்தைகள்‌ அதே வகுப்பில்‌ ஓராண்டு பயில வேண்டும்‌ என்ற முறையையும்‌ மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கண்டிப்பு:

தேசிய கல்விக்‌ கொள்கையைப்‌ பின்பற்றி நடத்தப்படும்‌ மத்திய அரசுப்‌ பள்ளிகளுக்கு, இந்தப்‌ புதிய நடைமுறை பொருந்தும்‌ எனவும்‌ மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏழை எளிய குடும்பங்களைச்‌ சேர்ந்த குழந்தைகள்‌, தடையின்றி எட்டாம்‌ வகுப்பு வரை கல்வி பெறுவதில்‌, ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின்‌ இந்த நடவடிக்கை

ஏற்படுத்தியுள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. Kodaikanal Cold Wave: கொடைக்கானலில் அதிக குளிரால் உறைந்த நீர்; புற்களில் ரம்மியமான காட்சி.! 

தமிழ்நாடு மாநில பள்ளிகளில் திட்டம் அமல் ஆகாது:

தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரை, தேசியக்‌ கல்விக்‌ கொள்கையைப்‌ பின்பற்றாமல்‌, நமது மாநிலத்தின்‌ தேவைகளைக்‌ கருத்தில்‌ கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநிலக்‌ கல்விக்‌ கொள்கையை உருவாக்குவதற்காக, நமது அரசு தொடங்கிய பணிகள்‌ நிறைவுறும்‌ தருவாயில்‌ உள்ளன. தமிழ்நாட்டில்‌, மாநிலக்‌ கல்விக்‌ கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும்‌ சூழ்நிலையில்‌, மத்திய அரசின்‌ இத்தகைய நடவடிக்கைகள்‌ எதுவும்‌ தமிழ்நாட்டில்‌ செயல்பட்டுவரும்‌ மத்திய அரசுப்‌ பள்ளிகளைத்‌ தவிர பிற பள்ளிகளுக்குப்‌ பொருந்தாது என்பதைத்‌

தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌.

தமிழ்நாடு அரசு உறுதி:

எனவே, தமிழ்நாட்டில்‌ உள்ள பெற்றோர்களும்‌, மாணவர்களும்‌, ஆசிரியர்களும்‌, கல்வியாளர்களும்‌ ஒன்றிய அரசின்‌ கல்வி உரிமைச்‌ சட்ட விதிகள்‌ குறித்து எந்தவகையிலும்‌ குழப்பமடையத்‌ தேவையில்லை. தமிழ்நாட்டைப்‌ பொறுத்தவரையில்‌, தற்போதுள்ள தேர்ச்சி நடைமுறையே தொடரும்‌ என்பதை அழுத்தந்திருத்தமாகச்‌ சொல்லக்‌ கடமைப்பட்டிருக்கிறேன்‌. தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ குறிப்பிட்டதைப்‌ போல, ஒரு தலைமுறையில்‌ பெறக்கூடிய கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைகளுக்கும்‌ பாதுகாப்பாக அமையும்‌. கல்வி தான்‌ ஒரு சமூகத்தின்‌ எதிர்காலத்தின்‌ அடித்தளம்‌. எனவே, மாணவர்கள்‌ மகிழ்ச்சியோடும்‌, பாதுகாப்போடும்‌ கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்துவது தான்‌ திராவிட மாடல்‌ அரசின்‌ இலக்கு. இந்த இலக்கை எய்தி, இந்தியத்‌ துணைக்‌ கண்டத்திற்கே, தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாகத்‌ தொடர்ந்து விளங்கும்‌. அதற்கான அனைத்து முயற்சிகளையும்‌ தொடர்ந்து தொய்வின்றி, நமது அரசு முன்னெடுத்துச்‌ செல்லும்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement