IPL Auction 2025 Live

TN Weather Report: வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Heat Wave (Photo Credit: Pixabay)

ஏப்ரல் 26, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.

வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35-39° செல்சியஸ் இருக்கக்கூடும். Vlogger Couple Sexually Harassed in Kerala: கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா.. அமெரிக்க விலாக்கர்ஸ்க்கு பாலியல் வன்கொடுமை..!

மேலும், அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக உள்மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.