Minister EV Velu: மோசமான வானிலை., அமைச்சர் ஏவ வேலு பயணித்த விமானம்.. மதுரையிலேயே தரையிறக்கம்.!
இதனால் அவர் சாலை வழியாக தூத்துக்குடி பயணம்மேற்கொள்கிறார்.
நவம்பர் 21, மதுரை (Madurai News): வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தின் பல இடஙக்ளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக இராமேஸ்வரத்தில் நேற்று ஒரேநாளில் 43 செமீ அளவு மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் வீடுகளை சூழ்ந்துள்ளது. இன்றும் மழை தொடர்ந்து வருவதால், அம்மாவட்டத்தில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. Gold Silver Price: தங்கம் விலை மீண்டும் உச்சக்கட்டம்.. இன்று சவரன் ரூ.57,160 க்கு விற்பனை.!
மதுரைக்கே திரும்பிய விமானம்:
தூத்துக்குடி மாவட்ட அளவிலும், கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் ஏவ வேலு, மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தார். அப்போது, விமானம் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல் மோசமான வானிலை நிலவியுள்ளது. இதனையடுத்து, விமானம் மீண்டும் மதுரைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் ஏறிய இடத்திற்கே திரும்பினர். மேலும், 77 பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்ற நிலையில், அமைச்சர் ஏவ வேலு சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு சென்றார்.