நவம்பர் 21, சென்னை (Chennai News): சர்வதேச அளவில் நிலவிவரும் பொருளாதார சிக்கல், உக்ரைன் - ரஷியா போர், மத்திய கிழக்கு பதற்றம் உலகளவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பங்குசந்தைகளில் தொடர் ஏற்ற-இறக்கம் நிலவி, ஒவ்வொரு நாட்டையும் நேரடியாக-மறைமுகமாக பாதித்து பொருளாதார பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. Dindigul Accident: லாரி - இருசக்கர வாகனம் மோதி சோகம்., 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி.!
விண்ணைமுட்டும் தங்கம் விலை:
இந்தியாவை பொறுத்தமட்டில் தங்கம், வெள்ளி பொருட்களின் விலையானது தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. அதன் மீதான வரி குறிக்கப்பட்டாலும், கடந்த 2014ம் ஆண்டில் ரூ.25 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட தங்கம், இன்றளவில் 10 ஆண்டுகளில் 2 மடங்கு விலை உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தங்கம், தற்போது ரூ.60 ஆயிரத்தை நெருங்கி ஏற்ற-இறக்கத்தை சந்தித்துள்ளது. தங்க நகையை வாங்க நினைப்போர் விலையேற்றத்தால் பரிதவித்து வந்தாலும், நுகர்வு அதிகரிப்பால் விலை உச்சத்திலேயே இருக்கிறது.
இன்றைய விலை (Gold Rate Today in Chennai):
இந்நிலையில், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ரூ.7,145 க்கு விற்பனை செய்யபடுகிறது. சவரன் தங்கத்தின் விலை ரூ.240 உயர்ந்து, ரூ.57,160 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கிலோவுக்கு ரூ.1,01,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை ரூ.1440ம், நான்கு நாட்களில் ரூ.1680ம் உயர்ந்து இருக்கிறது.