IPL Auction 2025 Live

TN Weather Report: தமிழத்திற்கு அடுத்த 2 நாட்களுக்கு மழை... மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

Rains Cloud (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 26, சென்னை (Chennai): கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை இன்றும் நாளையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைக் குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் மறுசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஓட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று தெரிவித்துள்ளது.  Nike Layoff: தொடர் விற்பனை சரிவு எதிரொலி; 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது நைக் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்.!

மீனவர்களுக்கு எச்சரிக்கை: மேலும், இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை குமரிக்கடல் மற்றும் அதனை எட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.