Nike Logo (Photo Credit: Facebook)

நவம்பர் 26, கலிபோர்னியா (Technology News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் நைக் (Nike). இந்நிறுவனம் காலணிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் உற்பத்தியில், உலகளவில் சந்தைப்படுதலை கொண்ட முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.

தொடரும் பணிநீக்கம்: தற்போதைய தொழில்நுட்ப உலகில், பல்வேறு நிறுவனங்களும் தொடர்ந்து இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகளை அதிகரித்து வருகிறது. இதனால் பெருவாரியான ஊழியர்கள் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்டவாறு இருக்கின்றனர். அதுசார்ந்த செய்திகள் தொடர்ந்து கிடைக்கப்பெறுகின்றன.

நைக்கின் அதிர்ச்சி அறிவிப்பு: இந்நிலையில், நைக் நிறுவனமும் தனது எதிர்காலம் கருதி 100 பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் உள்ள அதன் கிளை நிறுவனங்களுக்கும் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.

இலாபம், விற்பனை குறைவு: தற்போதைய பணிநீக்கம் காரணமாக 400 மில்லியன் அமெரிக்க டாலர் செலவை அந்நிறுவனம் சந்திக்கும் எனினும், கடந்த சில மாதங்களாகவே குறைந்த விற்பனை காரணமாக இலாபம் என்பது இல்லாமல் நைக் செயல்பட்டு வருகிறது. தொடர் சரிவால் அந்நிறுவனம் தற்போது பணிநீக்கத்தை கையில் எடுத்துள்ளது. 37000 Women Participate In Maha Raas: குஜராத் மாநிலத்தில் கோலாகலம்... ஒரே இடத்தில் 37,000 பெண்கள் நடனம்..!

பிற நிறுவனங்களும் பாதிப்பு: கடந்த 1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட நைக் நிறுவனம், தற்போது சர்வதேச அளவில் 83,700 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. நைக் நிறுவனம் போன்று விளையாட்டு ஆடை வடிவமைப்பில் ஈடுபட்டு வரும் ஜெடி ஸ்போர்ட்ஸ் உட்பட நிறுவனங்களும் நடப்பு ஆண்டில் சரிவை சந்தித்து இருக்கின்றன.

100 பேர் பணிநீக்கம்: கடந்த 2020ம் ஆண்டு கொரோனாவின் போது நைக் நிறுவனம் 700 பணியாளர்களை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டு இருந்தது. அதன்பின் தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்பு 100 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு திறனின் அறிமுகம்: நடப்பு ஆண்டில் மட்டும் 1,145 தொழில்நுட்ப நிறுவனங்கள் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு காரணமாக 2,60,509 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு 1,64,969 தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தனர்.