TN Weather Report: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

Sun (Photo Credit: Pixabay)

மார்ச் 08, சென்னை (Chennai): இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. ஈரோட்டில் அதிகபட்ச வெப்பம் 39.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. மார்ச் 8 முதல் மார்ச் 14 வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.இன்று முதல் மார்ச் 10 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் (The Indian Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Internet Apocalypse: நெருங்கிவரும் சூரியப்புயல்.. இணைய பேரழிவை எதிர்கொண்டு ஸ்தம்பிக்கப்போகும் உலகம் - நாசா அதிர்ச்சி தகவல்.!

மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.