Chennai City Commissioner: சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு.!
தேசியக்கட்சியின் மாநில தலைவர் படுகொலைக்குப்பின், சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் அவர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 08, தலைமை செயலகம் (Chennai News): சென்னை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த சந்தீப் ராய் ரத்தோர், காவலர் பயிற்சிப்பள்ளி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநகர காவல் (Chennai City Police Commissioner Arun IPS) ஆணையராக அருண் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே சென்னை மாநகர காவல் ஏடிஜிபி-யாக பணியாற்றி வந்த அருண், தற்போது மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. Dindigul Shocker: பழிக்குப்பழியாக பயங்கரம்.. தாய், மனைவி கண்முன்னே கொடூரமாக வெட்டிக்கொலை.. கத்தி எடுத்தவர் கத்தியால் மரணம்.!
ஆம்ஸ்ட்ராங் கொலையை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் மாற்றம்:
அருண் வகித்து வந்த சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல்களை உள்துறை செயலர் அமுதா உறுதி செய்துள்ளார். நேற்று முந்தினம், சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் முன்விரோதத்தில் பழிக்குப்பழியாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நிலையில், திடீரென சென்னை மாநகர காவல் ஆணையர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் அறிவிப்பு: