BMW Car Ran Over and Killed: சாலையில் உறங்கிய பெயிண்டர் மீது கார் ஏறி பலியான விவகாரம்; ராஜ்யசபா எம்.பி மகள் கைது., உடனடி ஜாமின்.!
விசாரணையில் அவர் ராஜ்யசபா எம்.பி மகள் என்பது உறுதியானது.
ஜூன் 18, அடையார் (Chennai News): சென்னை, பெசன்ட் நகர், ஓடக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சூர்யா (22). பெயிண்டராக வேலை பார்த்து வந்த சூர்யா, மதுபோதைக்கு அடிமையானவர் ஆவார். இதனால் குடித்துவிட்டு அவ்வப்போது சாலைகளிலேயே போதையில் உறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனிடையே, நேற்று முன்தினம் பெசன்ட் நகர், கலாஷேத்ரா காலனி, வரதராஜ நகர் சாலையில் போதையில் சாலையில் உறங்கி இருக்கிறார். அச்சமயம், சொகுசு கார் ஒன்று வந்த நிலையில், சூர்யாவின் மீது ஏறி-இறங்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த சூர்யாவை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியிலேயே (Painter death in a car crash in Chennai Besant Nagar) அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய 2 பெண்கள் அங்கிருந்து காருடன் தப்பி சென்றனர். இந்த விஷயம் குறித்து பெசன்ட் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Mercedes Runs Over Courier Agent Died: இருசக்கர வாகன ஓட்டியின் மீது ஏறி-இறங்கிய கார்; இளைஞர் பரிதாப பலி.! பகீர் காட்சிகள்.!!
காவல்துறை விசாரணை:
விசாரணையில், காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியது, ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி பீடா மஸ்தான் ராவ் என்பவரின் மகள் மாதுரி (வயது 21) என்பது தெரியவந்தது. அவருடன் தோழியும் பயணம் செய்த நிலையில், மாதுரி காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்ற தகவல் உறுதியானது. இதனையடுத்து, வழக்கு அடையார் போக்குவரத்து புலனாய்வுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு, அதிகாரிகள் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 304ன் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜாமினில் விடுவிப்பு:
நிகழ்விடத்தில் இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தபோது, காரின் பதிவெண் கொண்டு ராஜ்யசபா எம்.பி அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பி.எம்.ஆர் குரூப் நிறுவனத்தை நிர்வகித்து வரும் நிலையில், இந்நிறுவனம் பாண்டிச்சேரியில் கடல் உணவுகளை விநியோகம் செய்யும் வேலைகளை கவனிக்கிறது. அந்த நிறுவனத்தின் பெயரில் கார் பதிவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மேற்படி விசாரணைக்கு பின், மாதுரி சொந்த ஜாமினில் விடுவித்து அனுப்பி வைக்கப்பட்டார்.
அடையாளம் காணப்பட்டது எப்படி?
காரின் உரிமையாளரான பிஎம்ஆர் நிறுவனத்திற்கும், ராஜ்யசபா எம்.பிக்கும் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் விபத்தை ஏற்படுத்திய பின்னர் மாதுரி அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் வருவதற்குள் உள்ளூர் மக்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டதைத்தொடர்ந்து, அவர் பயத்தில் அங்கிருந்து காருடன் புறப்பட்டு சென்றுள்ளார். அவசர ஊர்திக்கு அவர் அளித்த தகவலின் பேரில், மாதுரி உடனடியாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.