ஜூன் 19, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, எரவாடா பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது மெர்சிடஸ் ரக கார் ஒன்று மோதி விபத்தில் சிக்கியது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர், தரையில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டியின் மீது வாகனத்தை (Pune Road Accident Courier Boy Dies) ஏற்றி-இறக்கியதால், விபத்தில் சிக்கிய நபர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியபோது மரணம் உறுதி செய்யப்பட்டது. பின் இந்த விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விபத்தில் உயிரிழந்தது தனியார் கொரியர் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வரும் கேதர் மோகன் சவாண் (வயது 41) என்பதை கண்டறிந்தனர். காரின் பதிவெண் கொண்டு விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் நந்து அர்ஜுன் தவாலே கைது செய்யப்பட்டார். இவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Father Drowned In Water: கால்வாயில் விழுந்த மகன், மகளை காப்பாற்ற முயன்ற தந்தை தண்ணீரில் மூழ்கி பலி..!
குடும்பத்தினர் கண்ணீர்:
விபத்து நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமிராவில், பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ பதிவாகி இருக்கிறது. இந்த காட்சிகளின் பேரில் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்த கேதரின் குடும்பத்தினர், அவரின் மறைவால் கண்ணீர் சோகத்திற்கு உள்ளாகினர். ஏற்கனவே மராட்டிய மக்கள் கல்யாணி நகரில் நடைபெற்ற போர்செ கார் விபத்தின் வடு மறையாமல் இருக்கின்றனர். அவ்வழக்கில் தொடர்புடைய சிறாரின் குடும்பத்தினர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில் தற்போது அடுத்த சோகம் நடந்துள்ளது.
PUNE | पुण्यातील पोर्शे अपघात प्रकरणानंतर, मंगळवारी शहरातील गोल्फ कोर्स परिसरात मर्सिडीज कारने दुचाकीस्वाराला चिरडल्याची घटना उघडकीस आली. या भीषण अपघातात दुचाकीस्वाराचा मृत्यू झाला. या अपघातात गंभीर जखमी झालेल्या पीडितेला तातडीने रुग्णालयात दाखल करण्यात आले. मात्र, उपचार सुरू… pic.twitter.com/URqPnF67Au
— ℝ𝕒𝕛 𝕄𝕒𝕛𝕚 () June 18, 2024