Road Accident: நின்று கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்து.. 3 பேர் பலியான சோகம்..!

வேலூரில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Road Accident (Photo Credit: Pixabay)

டிசம்பர் 04, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டம், கொணவட்டம் பகுதி சென்னை - பெங்களூரு (Chennai To Bengaluru NH) தேசிய நெடுஞ்சாலையில் இன்று (டிசம்பர் 04) அதிகாலை சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி ஜீப் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில், ஓட்டுநர் உட்பட 4 பேர் வந்துள்ளனர். அப்போது, ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த பேரிகார்டில் மோதியுள்ளது. இதனையடுத்து, சர்வீஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதி (Accident) விபத்துக்குள்ளானது. வானிலை: இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு; நாளைய வானிலை நிலவரம்.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!

இதில், ஜீப்பில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சென்னையை சேர்ந்த ஒருவர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதன் முதற்கட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி சென்னை மணலி பகுதியைச் சேர்ந்த மாலிக் பாஷா உட்பட 3 பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif