வானிலை: இன்று 5 மாவட்டங்களில் கனமழை; நாளை வானிலை நிலவரம் என்ன?.. விபரம் உள்ளே.!
இன்று தென்தமிழகம், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மட்டுமே இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 26, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பொறுத்தவரையில், வடகிழக்கு பருவமழை தென்தமிழகத்தில் தீவிரமாக உள்ளது. தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல், மதுரை சட்டம்பட்டி பகுதியில் தலா 11 செமீ மழையும், கன்னியாகுமரி குளச்சல், மதுரை இடையப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் தலா 9 செமீ மழையும் அதிகபட்சமாக பெய்துள்ளது.
நுங்கம்பாக்கத்தில் அதிக வெப்பம் பதிவானது:
மதுரை மாநகரில் கலந்துரி, தல்லாகுளம், மதுரை வடக்கு, பெரியப்பட்டி உட்பட பல இடங்களில் 7 செமீ மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி, விருதுநகர், திருநெல்வேலி, கோவை, புதுக்கோட்டை, ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, தென்காசி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, திருநெல்வேலி, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர் உட்பட பல மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் 35.1 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும், ஈரோட்டில் 17 டிகிரி செல்ஸியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. Krishnagiri Shocker: கோழித்தீவன மூட்டை சரிந்து விழுந்து அக்கா-தங்கை பரிதாப பலி; பச்சிளம் பிஞ்சை பறிகொடுத்து பெற்றோர் கண்ணீர் கதறல்.!
இன்றைய வானிலை (Today Weather):
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 26.10.2024 இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளைய வானிலை (Tomorrow Weather):
27.10.2024 முதல் 30.10.2024 வரையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 31.10.2024 முதல் 01.11.2024 வரையில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம் (Chennai Weather Today):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Fishermen Weather Warning):
26.10.2024 அன்று கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)