Thally Police Station, Krishnagiri Dt (Photo Credit: Facebook)

அக்டோபர் 26, தளி (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, தளி, கோபசமுத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் ரவிக்குமார். இவருக்கு சொந்தமாக கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தில் வசித்து வரும் முகமது சமீதுலா தனது மனைவி ஷகீலாவுடன் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சகோதரிகள் விளையாட்டு:

தம்பதிகளுக்கு 4 வயதுடைய சார்பானு, 3 வயதுடைய ஆயத் கான் என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறர்கள். இவர்களும் பெற்றோருடன் தங்கி இருக்கின்றனர். இதனிடையே, இன்று சகோதரிகள் இருவரும் கோழித்தீவன மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இடத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். Madurai Rains: 70 ஆண்டுகளுக்கு அதிக மழை; 30 ஆண்டுகளுக்கு பின் தத்தளித்த மதுரை.. கனமழையால் தவித்துப்போன தூங்கா நகரம்.. காரணம் என்ன? 

Child Death Hand (Photo Credit: Pixabay)
Child Death Hand (Photo Credit: Pixabay)

தீவன மூட்டைகள் சரிந்து விழுந்து சோகம்:

அச்சமயம், எதிர்பாராத விதமாக மூட்டைகள் சரிந்ததில், இருவரும் மூட்டைக்கு அடியில் சிக்கி இருக்கின்றனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அவர்களை விரைந்து மீட்க முயற்சித்துள்ளனர். மயக்க நிலையில் மீட்கப்பட்ட சகோதரிகளை அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதி செய்தபோது, அங்கு சிறுமிகளின் மரணம் உறுதி செய்யப்பட்டது.

இருவரும் மரணம்:

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த தளி காவல்துறையினர், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வேலைக்கு வந்த இடத்தில் தங்களின் மழலைகளை பறிகொடுத்த சோகத்தில் பெற்றோர் கண்ணீருடன் இருந்தது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.