Tirunelveli Crime News: காதலிக்க மறுத்த இளம்பெண் குத்திக்கொலை: திட்டமிட்டு ஒருதலைக்காதலன் நடத்திய வெறிச்செயல்.. குடும்பத்தினர் கண்ணீர்.!
18 வயதுடைய பெண்மணி காதலில் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்தும், காதல் கொண்டேன் என சைக்கோ போல நடந்துகொண்ட கயவனின் பதைபதைப்பு செயல்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அக்டோபர் 03, திருநெல்வேலி (Tirunelveli Crime News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்பணி கரிசல்குளம் பகுதியில் வசித்து வருபவர் மாரியப்பன். இவருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். கடைக்குட்டி மகள் சந்தியா (வயது 18).
நெல்லை நகரம் கீழரதவீதி பகுதியில் இருக்கும் ராஜம் டாய்ஸ் & பேன்சி ஸ்டோர் கடையில் வேலைபார்த்து வருகிறார். நேற்று கடைக்கு தேவையான கூடுதல் பொருட்களை எடுக்க குடோனுக்கு சென்றுள்ளார்.
இந்த கடைகள் குடோன் காந்தியம்மன் கோவில் பகுதியில் இருக்கிறது. நேற்று குடோனுக்கு சென்ற சந்தியா, மீண்டும் நேரம் ஆகியும் கடைக்கு வரவில்லை. Shocking Video: சர்க்கஸில் இருசக்கர வாகன ஓட்டிக்கு நேர்ந்த பயங்கரம்: தீப்பற்றி எரிந்து மரணத்தை தொட்டுவந்த பகீர் வீடியோ வைரல்.!
இதனால் சந்தேகமடைந்த சக பணியாளர்கள், குடோனுக்கு சென்று பார்த்தபோது இரத்த வெள்ளத்தில் அவர் உயிரிழந்து கிடந்துள்ளார். பதறிப்போன பணியாளர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெல்லை நகர காவல் அதிகாரிகள், சந்தியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடத்தினர்.
இதனிடையே, ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் உண்டாக்கின. சந்தியாவின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரியவந்து, நிகழ்விடத்தில் குவிந்தனர். World Best Whiskey Awards 2023: உலகளவில் மிகச்சிறந்த விஸ்கியாக தேர்வு செய்யப்பட்டது, இந்தியாவின் “இந்த்ரி” விஸ்கி..!
இதனால் பாதுகாப்பு கருதி கூடுதல் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விசாரணையில், அங்குள்ள முனைஞ்சிப்பட்டி, தோப்பூர் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ் கண்ணன் (வயது 19).
இவர் சந்தியா வேலை பார்த்துவந்த கடைக்கு அருகேயுள்ள கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. சந்தியாவும் ராஜேஷிடம் சகோதரத்துவ முறையில் பேசி வந்துள்ளார்.
ஆனால், ராஜேஷோ சந்தியாவின் மீது காதல் வயப்பட்ட நிலையில், தனது காதலை பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு சந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டித்துள்ளார். ராஜேஷ் கண்ணன் காதலில் உறுதிபட இருந்துள்ளார். Speed Skating 3000m: மேலும் ஒரு பதக்கம்… அதிவேக ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றது இந்தியா…!
சம்பவத்தன்று சந்தியா குடோனுக்கு தனியே செல்வதை பார்த்த ராஜேஷ், ஒன்று காதலை ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மரணம் தான் என்ற முடிவுடன் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
குடோனுக்குள் வைத்து ராஜேஷ் காதலை தெரிவித்த நிலையில், சந்தியா மறுத்ததால் தான் திட்டமிட்டு மறைத்து எடுத்துச்சென்ற கத்தியால் குத்தி கொலை செய்து தப்பிச்சென்றார்.
காவல் துறையினர் ராஜேஷ் கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.