Tamilnadu Chief Secretary: தமிழ்நாடு தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம்; தமிழ்நாடு அரசு உத்தரவு.!

முதல்வரின் தனிப்பட்ட செயலர்களில் முதன்மை செயலாளராக இருந்து வந்த ஷிவ்தாஸ் மீனா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Muruganandam IAS (Photo Credit: @TNDIPRNEWS / @Nandhini_Twits X)

ஆகஸ்ட் 19, சென்னை (Chennai): சென்னையில் நேற்று கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரூ.100 சிறப்பு நாணயமும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களால், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர், தமிழ்நாடு முதல்வர், திமுக & பாஜக தலைவர்கள் கலைஞரின் நினைவிடம் சென்று மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு பின் தமிழ்நாடு அரசுத்துறையில், தலைமை செயலாளராக பணியாற்றி வரும் ஷிவ்தாஸ் மீனா, அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவரின் பதவிக்காலம் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவுபெறவுள்ள நிலையில், அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டார். Tamilnadu Shocker: 13 பள்ளி மாணவிகளை சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்.. தமிழகமே அதிர்ச்சி.. என்.சி.சி வகுப்பு பேரில் அட்டூழியம்.!

திறமையான ஐஏஎஸ் அதிகாரி:

இந்நிலையில், இன்று தலைமை செயலாளர் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன்படி, தமிழ்நாடு மாநில தலைமை செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார். ஐஏஎஸ் முருகானந்தம் கடந்த 2001 - 2004 காலத்தில் கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி இருக்கிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்காலத்தில், பொதுத்துறை செயலராகவும் இருந்துள்ளார். தமிழ்நாடு முதல்வரின் தனிப்பட்ட செயலர்களில், முதன்மை செயலராக பணியாற்றிய முருகானந்தம், பல துறைகளில் சிறப்புமிக்க புலமை பெற்றவரும் ஆவார். 1991ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச்-சில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர். அதனால் முதல்வருக்கு நெருக்கமான செயலர்களில், இவர் முக்கியமானவர்கவும், முதன்மையானவராகவும் இருந்து இருக்கிறார். இதனிடையே, அவர் தமிழ்நாடு மாநில தலைமை செயலாளராக பொறுப்பேற்க இருக்கிறார்.

தலைமை செயலாளர் பொறுப்பு, முதல்வருடன் நெருங்கிய பொறுப்பாகவும், தமிழ்நாட்டில் செயல்படும் ஒவ்வொரு துறைகளின் செயல்பாடுகளை கவனிக்கும் பொறுப்பாகவும் இருக்கிறது. இதனால் தலைமை செயலாளர் பொறுப்பு, முதல்வருக்கு இணையான பொறுப்புகளில் ஒன்றாகவும் கவனிக்கப்படுகிறது.