TN Weather Update: மிதமான மழைக்கு வாய்ப்பு.. நாளைய வானிலை அப்டேட்: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 09, சென்னை (Chennai): சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 08:30 மணி அளவில் பூரியிலிருந்து (ஓடிசா) 50 கீ.மீ கிழக்கு-தென் கிழக்கே, கோபால்பூரிலிருந்து (ஒடிசா) 140 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே, பாரதீப்பிலிருந்து (ஓடிசா) 90 கீ.மீ தென்மேற்கே, கலிங்கபட்டினத்திலிருந்து (ஆந்திரா) 260 கீ.மீ கிழக்கு-வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் ஒடிசா கடற்கரையை, பூரிக்கு அருகில் கடக்க கூடும். அதன் பிறகு இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சற்று வலுக்குறையக்கூடும்.
நாளைய வானிலை (Tomorrow weather): அதனால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 – 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) அறிக்கை வெளியிட்டுள்ளது. Tractor Accident: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது நடந்த பரிதாப நிகழ்வு.. டிராக்டர் கவிழ்ந்து 3 சிறுவர்கள் பலி..!
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 11ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இன்று வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய-தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.