IPL Auction 2025 Live

Pongal Celebration: இன்று தை 2ம் நாள்: மாட்டுப்பொங்கல் வைக்க நல்ல நேரம் என்ன?.. விபரம் இதோ.!

தனக்கென தனி வரலாறு கொண்டு, உலகின் மூத்த குடியாக வாழும் தமிழ்க்குடியின் பாரம்பரிய திருவிழா ஒவ்வொரு ஊரிலும் களைகட்டுகிறது.

Maatu Pongal (Photo Credit: @suryaxavier1 / @OfficeofminMRV X)

ஜனவரி 16, சென்னை (Chennai): உலகெங்கும் வாழும் தமிழர்கள் கோலாகலமாக சிறப்பிக்கும் தைப் பொங்கல் பண்டிகையானது நேற்று சிறப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இன்று மாட்டுப்பொங்கல் சிறப்பிக்கப்படவுள்ளது. உழவுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், அதற்கு முதற்காரணமாக இருக்கும் கதிரவனுக்கு தனது மரியாதை வழங்கவும் தை 01 அன்று சூரிய பொங்கல் சிறப்பிக்கப்படுகிறது.

இன்று (16 ஜனவரி 2024) மாட்டுப்பொங்கல்: அதனைத்தொடர்ந்து, தை 02ம் தேதி விவசாயிக்கு உழவுப்பணிகளுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்த மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் விவசாயப்பெருமக்கள் தங்களின் வீடுகளில் உள்ள கால்நடைகளை சுத்தம் செய்து, பொங்கல் வைத்து வழிபட்டு மகிழ்வார்கள். Bulls Fight Boy Died: காளைகளுக்குள் நடந்த சண்டையில் 15 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி காணொளி உள்ளே.! 

பொங்கல் வைத்து வழிபட நல்லநேரம்: அந்த வகையில், பொங்கல் வைக்க இன்று நல்லநேரம் காலை 11 மணிமுதல் 1 மணிவரை இருக்கிறது. கால்நடைகளை தயார் செய்து, மஞ்சள் & குங்குமம் வைத்து அலங்கரித்து தீபம் ஏற்றி அவர்களுக்கான மரியாதை இந்நேரத்திற்குள் செலுத்திடலாம். இன்றைய நாளில் பல்வேறு இடங்களில் ஆடலும்-பாடலும் நிகழ்ச்சிகளுக்கும் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். அதேபோல, உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது. அதனை பல தொலைக்காட்சிகள் வாயிலாக நேரலையும் காணலாம்.