ஜனவரி 15, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர், பார்ரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் மிஸ்ரா. இவர் மரக்கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். ராஜேஷ் மிஸ்ராவின் மனைவி அனுபமா. தம்பதிகளுக்கு கிருஷ்ணா (வயது 15), ராஜ் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இவர்களில் கிருஷ்ணா அங்குள்ள உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வேலையில் சிறுவன் மார்க்கெட் பகுதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். சிறுவன் தனது மிதிவண்டியில் வந்துள்ளார்.
காளைகள் சண்டையில் சிறுவன் பலி: அச்சமயம், சாலையின் குறுக்கே திடீரென புகுந்த காளை மாடு ஒன்று, சிறுவனின் மீது பாய்ந்து இருக்கிறது. இதனால் மிதிவண்டியில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த சிறுவன், சாலையில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. Prakhar Chathurvedi New Record: U-19 பிரிவில் புதிய சாதனை: 404 ரன்கள் குவித்து அசத்திய பிரகர் சதுர்வேதி.. முழு விபரம் இதோ.!
கண்ணீரில் குடும்பத்தினர்: இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுவன் குறித்து விசாரணை நடத்தி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலை அறிந்து கண்ணீருடன் மருத்துவமனை விரைந்த பெற்றோர், மகனின் உடலை கட்டியணைத்து கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது. சிறுவன் இரண்டு காளைகளின் சண்டையில் உயிரிழந்த பதைபதைப்பு காட்சிகளும் அங்கிருந்த கேமிராவில் பதிவாகி இருக்கின்றன. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
அரசு நிர்வாகத்திற்கு கண்ணீர் கோரிக்கை: கான்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருக்களில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடு, காளைகளால் பல நேரங்களில் மக்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. சில நேரம் சாலைகளில் முகாமிடும் காளைகளால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு, சில நேரம் காயங்கள் வரை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 15 வயது சிறுவனின் மரணம் ஏற்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி நிர்வாகத்தினர் சாலைகளில் சுற்றித்திரியும் காளைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
UP : कानपुर में 2 सांडों की लड़ाई में साइकिल सवार 15 वर्षीय लड़के की जान चली गई। pic.twitter.com/iavbhogCyn
— Sachin Gupta (@SachinGuptaUP) January 15, 2024