Kaanum Pongal in Chennai: சென்னை மக்களே ரெடியா? காணும் பொங்கல் 2025; மெரினா செல்வோர் கவனத்திற்கு..! விபரம் உள்ளே.!
காணும் பொங்கலை முன்னிட்டு, சென்னையில் சில முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
ஜனவரி 15, சென்னை (Chennai News): காணும் பொங்கல் பண்டிகையை (Kaanum Pongal 2025) முன்னிட்டு, சென்னையில் திரளான மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து, சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 16.01.2025 அன்று காணும் பொங்கல் கொண்டாட்டத்தினை முன்னிட்டு சென்னையில் அனைத்து சாலைகளிலும் குறிப்பாக காமராஜர் சாலையில் பெருந்திரளான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Kaanum Pongal: காணும் பொங்கல் 2025: கொண்டாட காரணம் என்ன? அசத்தல் தகவல் இதோ.!
- காமராஜர் சாலையில் பொதுமக்கள், சாலையில் அதிகமாகும் வரை எந்தவித போக்குவரத்து மாற்றமும் செய்யப்படமாட்டாது.
- மெரினா கடற்கரைக்கு வரும் வாகனங்கள் காமராஜர் சாலையில் (மெரினா கடற்கரை சாலை) அதிகரிக்கும் போது போர்நினைவுச் சின்னத்தில் இருந்து (War Memorial) வரும் வாகனங்கள் வழக்கம் போல் கலங்கரை விளக்கம் (Light House) நோக்கி அனுமதிக்கப்படும்.
- கலங்கரை விளக்கம் (Light House) இருந்து வரும் வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக கட்டாயமாக திருப்பப்பட்டு (Compulsory Left Diversion) பாரதி சாலை, பெல்ஸ் சாலை, விக்டோரியா விடுதி வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
- வாலாஜா சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலை, பெல்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்தும், பாரதி சாலையில் இருந்து விக்டோரியா விடுதி சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (விக்டோரியா விடுதி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படும்)
- கண்ணகி சிலையிலிருந்து பாரதி சாலையை நோக்கி செல்லும் வாகனங்கள் ஒருவழி பாதையாக செயல்படும் பெல்ஸ் சாலை, பாரதி சாலை சந்திப்பில் இருந்து கண்ணகி சிலை நோக்கி நோ என்ட்ரி’ ஆகவும் செயல்படும்.
- காமராஜர் சாலையில் இருந்து கலங்கரை விளக்கம் நோக்கி வரும் கனரக மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள் 1300 மணி முதல் 2200 மணி வரை அனுமதிக்கப்படாது.
- வாகன ஒட்டுநர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்:
- உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையில் உள்ள மணற்பரப்பில் 13 தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு உயர் கோபுரத்திலும் 3 பேர் கொண்ட காவல் குழுவினர் பணியமர்த்தப்படுவர்.
- 12 முக்கிய இடங்களில் கூடுதலாக 13 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்காலிக கட்டுப்பாட்டறையில் உள்ள அகன்ற திரைகளில் கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
- மேலும், மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்கும்.
- மீட்புப் பணிக்காக மோட்டார் படகுகள் மற்றும் சுமார் 200க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
வாகன நிறுத்தம் இடத்தின் ஏற்பாடுகள் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு பின்வரும் பார்க்கிங் இடங்கள்:
1. ஃபோர்ஷோர் சாலை
2. விக்டோரியா வார்டன் விடுதி
3. கலைவாணர் அரங்கம் பார்க்கிங்
4. பிரசிடென்சி கல்லூரி
5. மெட்ராஸ் பல்கலைக்கழகம்
6. டிடி.கேந்திராவிற்கு அப்பால் ஆடம்ஸ் சாலை (சுவாமி சிவானந்தா சாலை)
7. MRTS சேப்பாக்
8. லேடி வெலிங்டன் பள்ளி
9. குயின் மேரிஸ் மகளிர் கல்லூரி
10. சீனிவாசபுரம் லூப் ரோடு / மைதானம்
11. பி.டபிள்யூ.டி. மைதானம் (செயலகத்திற்கு எதிரே)
12. செயின்ட் பேட் மைதானம்
13. அன்னை சத்யா நகர்
14. ஈ.வி.ஆர்.சாலை, மருத்துவக் கல்லூரி மைதானம் (வேன் பார்க்கிங்)
15. செயலகத்தின் உள்ளே (காவல்துறை வாகனங்கள்)
முழு விவரம் இதோ:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)