Kaanum Pongal 2025 (Photo Credit: Team LatestLY)

ஜனவரி 10, சென்னை (Festival News Tamil): தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான, உழவுக்கு உதவும் கதிரவனுக்கும், பசுவுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படும் பொங்கல் (Pongal 2025) பண்டிகையின் நான்காம் நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கல் கன்னிப் பொங்கல் (Kanni Pongal) என்றும் அழைக்கப்படுகிறது. பழைய கசப்பு எண்ணங்களை தூக்கி எரிந்து போகியை கொண்டாடி, கதிரவனுக்கு நன்றி சொல்லி தைப்பொங்கலை வரவேற்று, உழவுக்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கு நன்றிசொல்லி மாட்டுப்பொங்கல் கொண்டாடி, புதிய எண்ணத்துடன் பயணத்தை தொடங்க, உற்றார்-உறவினர்களிடம் ஆசிபெற காணும் பொங்கல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!

காணும் பொங்கலின் நோக்கம்:

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் காணும் பொங்கல், திருவள்ளுவர் நாளாகவும் (Thiruvalluvar Day) சிறப்பிக்கப்படுகிறது. காணும் என்ற சொல்லுக்கு, காண்பதும்-பார்ப்பதும் என்று பொருள். பொங்கல் பண்டிகையை கொண்டாடி முடிக்கும் அதே வேளையில், உற்றார்-உறவினர்களுடன் நட்பை பாராட்டி, அதனை நல்ல வகையிலான முன்னேற்றத்துடன் எடுத்துச் செல்லும் வகையில், உறவினர்களின் வீட்டிற்கு சென்று அவர்களிடம் ஆசிபெற்று, நல்ல கருத்துக்களை பகிர்ந்து வருவது காணும் பொங்கலாக கவனிக்கப்படுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்த நாளில் நல்ல எதிர்காலம் அமைய கடவுளை பிரார்த்தித்து குடும்பத்தினரிடம் ஆசி வாங்குவது கன்னிப் பொங்கல் பண்டிகையாகவும் கவனிக்கப்படுகிறது. Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.! 

கன்னிப்பொங்கல்:

அதேநேரத்தில், திருமணம் ஆகாத கன்னிப்பெண்கள், தனக்கு நல்ல துணை வேண்டி விரதம் இருந்து பொங்கல் வைத்து வழிபடுவது கன்னிப் பொங்கல் ஆகவும் கவனிக்கப்படுகிறது. அன்றைய நாளில் பொங்கல் வைத்து வழிபட நினைக்கும் பெண்கள், பொங்கல் பானையில் மஞ்சள் திலகம் இட்டு சுமங்கலிகளின் கையில் கொடுத்த ஆசி பெற்று பொங்கல் வைத்து வழிபடுவது நல்லது. அன்று பொங்கல் வைக்க நல்ல நேரமாக காலை 10:30 முதல் 11:30 வரை கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம். பெற்றோர், தாத்தா-பாட்டி ஆகியோரிடம் ஆசிபெறலாம். Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..! 

காணும் பொங்கலுக்கு கேட்டு மகிழவேண்டிய பாடல்கள்: