Trichy Chennai Highway Accident: சாலையை கடந்த கன்றுகுட்டிக்காக சடன் பிரேக்.. ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து.. 2 பேருக்கு மரண பயம்.!

சாலையை அவசர கதியில் கடந்த கன்றுக்குட்டி மீது மோதாமல் இருக்க நினைத்து ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அடித்த பிரேக்கால், பின்னால் வந்த லாரி, ஆம்னி பேருந்து என அடுத்தடுத்து மோதிக்கொண்டு விபத்தில் சிக்கிய சோகம் நடந்துள்ளது. மிதவேகத்தில் சென்றால் தவிர்க்கப்பட்டிருக்கும் விபத்து குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

Trichy Chennai Highway Accident: சாலையை கடந்த கன்றுகுட்டிக்காக சடன் பிரேக்.. ஷேர் ஆட்டோ, லாரி, ஆம்னி பேருந்து அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து.. 2 பேருக்கு மரண பயம்.!
Accident Visuals from Spot

பிப்ரவரி 03, செங்கல்பட்டு: செங்கல்பட்டு (Chengalpattu) மாவட்டத்தில் உள்ள வையாவூரில் (Vaiyavoor) இருந்து, சென்னையில் உள்ள வியாசர்பாடி (Towards Vyasarpadi, Chennai) நோக்கி ஷேர் ஆட்டோ  (Share Auto) ஒன்று நேற்று பயணம் செய்துகொண்டு இருந்தது. இந்த ஷேர் ஆட்டோ திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (Trichy Chennai National Highway) பழவேலி பகுதியில் சென்றபோது, கன்றுக்குட்டி சாலையை கடக்க முயற்சிப்பதை ஓட்டுநர் கண்டுள்ளார்.

இதனால் அதன் மீது மோதாமல் விபத்தை தவிர்க்க அவசர கதியில் பிரேக் அடிக்க (Sudden Break Applied), அவருக்கு பின்னால் வந்த லாரி (Lorry) ஓட்டுநர் அதனை எதிர்பாராத காரணத்தால் அவர்களும் விபத்தை தவிர்க்க முயற்சித்துள்ளனர். ஆனால், அது பலனின்றி லாரி ஷேர் ஆட்டோவின் மீது மோதியதில், இரண்டு வாகனமும் சாலையோர பள்ளத்தில் இறங்கியுள்ளது.

லாரிக்கு பின்புறம் தனியார் ஆம்னி பேருந்து (Omni Bus) ஓட்டுநர் வந்துகொண்டு இருக்க, ஷேர் ஆட்டோவில் தொடங்கிய அடுத்தடுத்த எதிர்பாராத சம்பவம் ஆம்னி பேருந்து வரை பரவி, ஆம்னி பேருந்து ஓட்டுநர் பெரும் விபத்தை தவிர்க்க எண்ணி செயல்பட்டாலும் பேருந்து மரத்தின் மீது மோதி நின்றது. Director K Viswanath Died: பழம்பெரும் இயக்குனர் பத்மஸ்ரீ கே. விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் குடும்பத்தினர், திரையுலகம்.!

இந்த விபத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் சுந்தரபாண்டியன் (வயது 54), கிளீனர் சரவணன் (வயது 39) ஆகியோர் (Omni Bus Driver & Cleaner Injured) படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

மேலும், பேருந்தின் முன்புறம் சேதம் அடைந்ததால், கிறேன் உதவியொரு பேருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மிதமான வேகத்தில் இவர்கள் சென்றிருந்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல் மேற்படி பயணித்து இருக்கலாம் என்பதே பலரின் அறிவுரை.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 03, 2023 09:30 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Advertisement


Advertisement
Advertisement
Share Us
Advertisement