Trichy Accident: கறி விருந்து முடித்து வீட்டிற்கு திரும்பிய புதுமண தம்பதி லாரி மோதி பலி... ஒருவரையொருவர் பார்த்தவாறு பிரிந்த உயிர்.!
தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டு கணவருடன் வீட்டிற்கு திரும்பிய பெண்மணியின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், கணவன் - மனைவியும் ஒருவரையொருவர் பார்த்தவாறு உயிரைவிட துயரம் நடந்துள்ளது.
மார்ச் 13, லால்குடி (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி (Lalgudi, Trichy), சாத்தமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் ஜெகநாதன். இவரின் மகள் ராகினி (வயது 32). பெரம்பலூர் (Perambalur) மாவட்டம் சிறுவயலூர் கிராமத்தில் வசித்து வருபவர் தெய்வீகராஜன். இவரின் மகன் செந்தில்குமார் (வயது 33). தம்பதிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி திருமணம் நடைபெற்றது.
புதுமணத்தம்பதிகள் சம்பவத்தன்று ராகினியின் தாயார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அங்கு கறி விருந்துக்கு பின்னர் உறவினர்களிடம் விடைபெற்று பெரம்பலூர் (Towards Perambalur) நோக்கி பயணம் செய்துள்ளனர். இவர்கள் திருச்சி நம்பர் 1 சுங்கச்சாவடியில் இருந்து திருச்சி - சென்னை (Trichy Chennai National Highway) தேசிய நெடுஞ்சாலையில் செல்ல திட்டமிட்டுள்ளனர். BSF Arrest Pakistani: எல்லைதாண்டி வந்த பாகிஸ்தானியை கைது செய்த எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள்.. தொடரும் தீவிர விசாரணை.!
இவர்களின் வாகனம் ஆங்கரை பகுதியில் வருகையில், திருச்சியில் இருந்து அரியலூர் (Trichy to Ariyalur) நோக்கி பயணம் செய்த கனகர லாரி, தம்பதிகளின் வாகனம் (Lorry Hits Two Wheeler) ஏது பயங்கரமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தவாறு சாலையிலேயே இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த லால்குடி (Lalgudi Police Station) காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த இருதரப்பு உறவினர்கள், இருவரின் உடலை கண்டு கதறியழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநராக கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம், பீளமேடு பிரபாகரன் (வயது 40) என்பவரை அதிகாரிகள் கைது செய்தனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)