AIADMK SriRangam Poster: "எல்லாத்தையும் இழந்துவிட்டோம். இப்போதாவது ஒன்றிணையுங்கள்" - ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் தரப்புகளுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்த கோரிக்கை.!
பதவி தகராறில் இரு துருவங்களை போல பிரிந்த ஓ.பன்னீர் செல்வம் அணியும் - எடப்பாடி பழனிச்சாமி அணியும் ஒன்றிணைந்து அதிமுக இயக்கத்திற்காக பாடுபட வேண்டும் என திருச்சியில் பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
மார்ச் 09, திருச்சி (Trichy News): மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் (J. Jayalalithaa) இறப்புக்கு பின் அதிமுகவில் பல சிக்கல்கள் நிலவி, டிடிவி தினகரன் (T.T.V Dhinakaran) தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (AMMK) உதயமானது. ஓ.பன்னீர் செல்வம் (O. Panneer Selvam) மற்றும் எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy) ஆகியோர் இணைந்து அதிமுக (AIADMK) தலைமையிலான ஆட்சியை தக்கவைத்து கொண்டனர்.
ஆனால், இவர்களுக்குள் பதவி தொடர்பான பிரச்சனை நீடித்து, இரட்டை தலைமையின் கீழ் அதிமுக இருப்பதாக பல செய்திகள் வெளியாகின. திரைமறைவில் பல பனிப்போர் சம்பவங்களும் நடைபெற்றன. இந்த நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியான பின்னர், ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் தரப்பு அணிகள் வெளிப்படையாக பல இடங்களில் மோதலிட்டன.
இதற்கிடையே ஒருகட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து விலக்கிய எடப்பாடி பழனிச்சாமி (Edappadi Palanisamy), தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்து அதிமுகவை (AIADMK) கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவர் ஆதரவு நபர்கள் அனைவரும் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டனர். Bull Attacks Child: வீட்டு வாசலில் அமைதியாக நின்ற சிறுவனை தாக்கிய காளைமாடு.. வெளியான பதைபதைப்பு வீடியோ.. பெற்றோர்களே கவனம்.!
இதனால் இருதரப்பு கருத்து மோதல் பரபரப்பாகிய நிலையில், இருவரும் கட்சி எங்களுக்கு தான் சொந்தம் என நீதிமன்றத்திற்கு சென்றனர். வழக்கு விசாரணையில் முதற்கட்டமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாக வாதங்கள் நீதிபதிகளால் முன்வைக்கப்பட்டு, அவர் இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்ந்து வருகிறார்.
கடந்த ஈரோடு இடைத்தேர்தல் (Erode Bye Poll) வரையிலும் இவர்களின் தகராறு தொடர்ந்து வந்ததால், அக்கட்சியின் மீதான நம்பிக்கை மக்களிடையே குறைந்து அவையும் தேர்தல் முடிவில் எதிரொலித்தன. இந்த நிலையில், அதிமுக கட்சி தலைவர்கள் கழகத்திற்காக ஒன்றிணைய வவேண்டும் என திருச்சியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதுகுறித்த சுவரொட்டியில், "அதிமுக தலைவர்களே! ஆட்சியையே இழந்துவிட்டோம். நாடாளுமன்றத்தை துறந்துவிட்டோம், உள்ளாட்சியில் ஒதுக்கப்பட்டுவிட்டோம், ஈரோட்டில் இரட்டை இலையினால் காப்புத்தொகை பெற்றோம். திருத்துங்கள் இல்லையேல் கதியின்றி போவோம். இவன் அம்மாவின் உண்மை விசுவாசி ஆர்.டி சிவபாலன் ஸ்ரீரங்கம் கிழக்கு பகுதி செயலர்" என தெரிவிப்பட்டுள்ளது.