Illict Liquor Tamilnadu: கள்ளச்சாராயம் குடித்து 14 பேர் பலி எதிரொலி; தீவிர தேடுதல் வேட்டை.. மொத்தமாக 55,173 பேர் கைது.!

பெரும் போதகரை விஷயமாக தமிழ்நாட்டில் கிளம்பியுள்ள கள்ளச்சாராய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சோகம் கட்டாயம் நிகழும் என்பதே நிதர்சனம்.

TN Police (Photo Credit: The Hindu / The Print)

மே 16, சென்னை (Tamilnadu News): விழுப்புரம், செங்கல்பட்டு (Viluppuram & Chengalpattu District) மாவட்டத்தில் கள்ளச்சாராயம் (illict liquor Issue Many Died) அருந்திய 14 பேர் பலியானதை தொடர்ந்து, பலரும் தீவிர உடல்நலக்குறைவுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மேற்படியான விபரம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் தெரியவந்து பெரும் அதிர்வலையை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தலா ரூ.10 இலட்சம் அரசு சார்பில் நிதிஉதவி தருவதாக அறிவித்து இருந்தார். மேலும், கள்ளச்சாராயம் தொடர்பான விபரத்தில் குற்றம் இழைப்போரை கண்டறிந்து கைது செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 1,842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,558 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 19,028 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது மற்றும் வழக்கு தொடர்பாக தமிழ்நாடு காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக கள்ளச்சாராயம் தொடர்பாக நடந்த வேட்டையில் 1,842 வழக்குகள் பதியப்பட்டு செய்யப்பட்டு, 1,558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். Jigarthanda 2: மீண்டும் மாஸ் சம்பவத்திற்கு படத்திற்கு தயாரா?.. ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் ரிலீஸ் அறிவிப்பு.!

19,028 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு, 4,943 லிட்டர் சாராய உரல்கள் அழிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்ட 16,493 IMFL பாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கள்ளச்சாராய விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது வரையில் மொத்தமாக 55,474 சாராய வழக்குகள் பதிவாகி, 55,173 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இவர்களில் 4,543 பேர் பெண்களும் ஆவார்கள். இந்த ஆண்டில் மொத்தமாக 2,55,078 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது.

பெரும் போதகரை விஷயமாக தமிழ்நாட்டில் கிளம்பியுள்ள கள்ளச்சாராய பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், எதிர்காலத்தில் மிகப்பெரிய சோகம் கட்டாயம் நிகழும் என்பதே நிதர்சனமான உண்மையாக இருக்கப்போகிறது.