Viluppuram Anbu Jothi Ashram: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பலாத்காரம், ஆதரவற்றோர் துன்புறுத்தல்., சிலர் மாயம்.. விசாரணையில் பதறவைக்கும் திருப்பங்கள்..!
9 பேர் கும்பல் கைது செய்யப்பட்டு விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 17, கெடார்: விழுப்புரம் (Viluppuram) மாவட்டத்தில் உள்ள குண்டலப்புலியூர் கிராமத்தில் அன்பு ஜோதி மனநலம் (Anbu Jothi Ashram) குன்றியோர், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக (Forgery on Anbu Jothi Ashrama) சமீபத்தில் பல புகார்கள் எழுந்தன. மேலும், ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டு இருந்த தனது வயதான மாமாவை காணவில்லை என சலீம் கான் என்பவர் உயர்நீதிமன்றத்தில் (Appeal on Highcourt) ஆட்கொணர்வு மனுதாக்கல் பதிவு செய்தார்.
இந்த உத்தரவின் பேரில் காவல் துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மேற்கொண்ட ஆய்வில் அனுமதி இன்றி ஆசிரமம் செயல்பட்டு வருவதும், இங்கு சேர்க்கப்பட்டுள்ள நபர்களை அடித்து துன்புறுத்துவதும் அம்பலமானது. இதில் பெரும் கொடூரமாக பெண்கள் பாலியல் (Sexual Abuse, Rape) ரீதியாக சித்ரவதையுடன் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேரும் மீட்கப்பட்டு அரசு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி (Mundiyampakkam Government Hospital) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இந்த தகவலை அறிந்த மாவட்ட ஆட்சியரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். முதற்கட்டமாக ஆசிரம நிர்வாகியான அன்பு ஜூபின், அன்பின் மனைவி மரியா ஜூபின், பணியாளர்கள் பிஜு மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் ஆகியோர் அனுமதியின்றி ஆசிரமத்தை நடத்தி, அங்கு தங்கியிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானது. Army Jawan Killed By DMK Councillor & Family: திமுக கவுன்சிலர் & குடும்பத்தினரால் இந்திய இராணுவ வீரர் அடித்தே கொலை.. தண்ணீர் குழாய் தகராறுக்காக குடும்பத்துடன் சேர்ந்து திமுக பிரமுகர் பயங்கரம்.!
பல அதிர்ச்சியூட்டும் தகவலை வாக்குமூலமாக பாதிக்கப்பட்டோரிடம் இருந்து பெற்ற கெடார் காவல் துறையினர், 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பு ஜூபின், மரியா ஜூபின் தவிர்த்து 4 பேரை கைது செய்தனர். குரங்கு தங்கிவிட்டது என முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அன்பு, மரியா ஆகியோர் சிகிச்சைக்கு பின்னர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
ஆசிரம ஊழியர்கள் தெலுங்கானா (Telangana) மாநிலம், ரெங்கா ரெட்டியை சேர்ந்த சதீஷ் (வயது 35), கேரளா (Kerala) மாநிலம், பாலக்காடை (Palakkad) சேர்ந்த தாஸ் (வயது 35), விழுப்புரம் (Viluppuram) பூபாலன் (வயது 34) ஆகியோர் என மொத்தமாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 203 பேரில் 99 பேர் சிகிச்சைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிற 44 சிகிச்சையில் உள்ளார்கள். எஞ்சியோர் கடலூர் (Cuddalore), திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் வசித்து வரும் நடராஜன், தனது பார்வையற்ற மாமா மனைவி லட்சுமியம்மாளை (வயது 80) மேற்படியான ஆசிரமத்தில் சேர்ந்திருந்தோம். அவரின் மகனான மனநலம் பாதிக்கப்பட்ட முத்து விநாயகம் (வயது 48) அவரும் அங்குதான் சேர்க்கப்பட்டார். இவர்களை கடந்த 2021 ஆகஸ்ட் 11ம் தேதி சேர்த்த நிலையில், பலமுறை அவர்களை பார்க்க முயற்சித்தபோது அனுமதி கொடுக்கவில்லை.
அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. அவர்களை கண்டறிந்து தர வேண்டும் என கெடார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி இருவரையும் மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகாரின் பேரிலும் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.