Cyclone Michaung Live Tracker Map on Windy: மிக்ஜாங் புயல் எங்கு நகருகிறது?.. நேரலையில் எப்படி?.. துல்லியமான தகவலை தெரிந்துகொள்ளுங்கள்.!

தலைநகர் சென்னையில் பலத்த காற்றுடன் மழை தொடருகிறது.

Cyclone Michaung (Photo Credit: @LatestLY X)

டிசம்பர் 04, சென்னை (Chennai): வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், மிக்சாங் புயலாக வலுப்பெற்று தற்போது ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் கடக்கவுள்ளது.

வடகடலோர மாவட்டங்களில் தொடரும் கனமழை: இதனால், ஆந்திர பிரதேச மாநிலம், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. சென்னை நகரில் பலத்த காற்றும் வீசி, பல இடங்களில் தொடர் மழை காரணமாக ஆறு வெள்ளநீர் ஆறு போல கரைபுரண்டு ஓடுகிறது. Cyclone Michaung Chennai Rains: வீதிகளில் கரைபுரண்டு ஓடும் மழைநீர்: சாலையில் மரம் சாய்ந்து விழுந்து விபத்து.. தவிர்க்கப்பட்ட அசம்பாவிதம்.! 

மக்களுக்கு அறிவுறுத்தல்: பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் பல இடங்களில் இரவு முதலாக துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பிரதான பகுதிகள் மட்டுமல்லாது, நகரின் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து, பிற செயல்களுக்காக வெளியே வர வேண்டாம் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரலையில் புயல் நகர்வுகளை அறிந்துகொள்ள விண்டி (Cyclone Live Tracker Windy): இந்நிலையில், புயலின் நகர்வு தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. மக்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புயலின் நகர்வுகளை Windy செயலி மூலமாக துல்லியமாக பார்க்கும் வசதியும் தற்போது உள்ளது. அதற்கான இணைப்பு இத்துடன் தரப்பட்டுள்ளது.



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif