டிசம்பர் 04, சென்னை (Chennai): வங்கக் கடலில் உருவாகிய ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், மிக்ஜாங் புயலாக (Cyclone Michaung Update) வலுப்பெற்றுள்ளது. இப்புயல் 100 கி.மீ வேகத்தில் ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் - மசூலிப்பட்டினம் இடையே டிசம்பர் 5 ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஆந்திர பிரதேச மாநிலம் - தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகிறது. சென்னை நகரில் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய வீதிகளில் சாலைகளில் நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், திருமுல்லைவாயலில் உள்ள அண்ணனூர் பகுதியில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து வீதியில் கிடக்கிறது. அந்த வீதியில் வெள்ள நீரும் கரை புரண்டு ஓடுகிறது. மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னையின் பல பகுதிகளில் தற்போது மழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், மக்கள் அத்தியாவசிய தேவை தவிர்த்து பிற செயல்களுக்காக வெளியே வர வேண்டாம் என்றும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. Mount Marapi Volcano Erupted: இந்தோனேஷியாவில் எரிமலை வெடித்து சிதற தொடங்கியது: மலையேற்ற குழுவை சேர்ந்த 11 பேர் பலி., 12 பேர் மாயம்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)