Savuku Shankar Arrest: காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசு; யூடியூபர் சவுக்கு சங்கர் கைது.!

பிரபலமான ஐபிஎஸ் அதிகாரி உட்பட பல காவல்துறை அதிகாரிகளை சர்ச்சைக்குரிய விவகாரத்தில் பேசிய யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

YouTuber Savukku Shankar (Photo Credit: @SavukkuOfficial X)

மே 03, தேனி (Theni News): தமிழ்நாடு அரசு அதிகாரியாக பணியாற்றிவிட்டு, சர்ச்சைக்குரிய வழக்கில் சிக்கி வேலையை  இழந்து, இன்று பிரபல யூடியூபராக தமிழ்நாடெங்கும் அறியப்படுபவர் சவுக்கு சங்கர் (Savukku Shankar). அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் குறித்த ஊழல், சர்ச்சைக்குரிய தகவல் ஆகியவற்றை செய்தியாக வெளியிட்டு வந்தவர், சமீபகாலமாக காவல்துறை அதிகாரிகள் பக்கம் திரும்பி அவர்களுக்கு எதிராக பேசி வந்தார். Google Doodle for India's First Women Wrestler: இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை பானு; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்.!

சைபர் கிரைம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து சர்சைக்குரிய வகையில் அவர் பேசி வந்த நிலையில், தற்போது கோயம்புத்தூர் சைபர் கிரைம் காவல் துறையினரால் தேனியில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விசாரணைக்காக கோவைக்கு அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர். மேற்படி விபரங்கள் சேய்கறிப்பட்டு வருகின்றன. முன்னதாக அரசியல்புள்ளிகளுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த விவகாரத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது காவல்துறையினரை சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.