Google Pixel 8a Smart Phone Expected Features: கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட் போன் பற்றிய வீடியோ காட்சிகள் வெளியீடு..! சுவாரசியத்தை அதிகரிக்கும் சிறப்பம்சங்கள்..!

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வெளிவர இருக்கும் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன் பற்றி இதில் காண்போம்.

Google Pixel 8a (Photo Credit: @Techypathshala X)

ஏப்ரல் 29, சென்னை (Technology News): கூகுள் பிக்சல் 8a (Google Pixel 8a)ஸ்மார்ட் போனின் கேமரா அம்சங்களை காட்சிப்படுத்தும் ஒரு வீடியோ தற்போது வெளிவந்துள்ளது. இந்த வீடியோ காட்சிகள் மற்றும் விளம்பர படங்கள் இவை இரண்டும் கூகுள் நிறுவனத்தால் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. புதிய கூகுள் பிக்சல் 8a போன் நான்கு வண்ண விருப்பங்களில் வர வாய்ப்புள்ளது. அவை porcelain white, obsidian black, bay blue மற்றும் mint நிறங்களாக இருக்கக்கூடும். மொபைலின் பின்புறத்தில், முந்தைய மாடலைப் போன்று இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் எல்இடி ஃபிளாஷ் (LED Flash) காணப்படுகிறது. இது எவ்வகையான சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்பதனை இதில் பார்க்கலாம். Teenager Was Shot Dead: மகளின் காதலரை வீட்டிற்கு வரவழைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை; முன்னாள் பாதுகாப்பு படை வீரர் ஆத்திரம்..!

கூகுள் பிக்சல் 8a (எதிர்பார்ப்பின் படி): கூகுள் பிக்சல் 8a ஸ்மார்ட்போனில் டென்சார் ஜி3 (Tensor G3) சிப்செட் கொண்டு வரக்கூடும். இந்த ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்டு 14 உடன் வெளியிடப்படலாம். இதில், 6.1-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவைக் காணலாம். மேலும், டாப் மாடலில் 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் பேஸ் மாடலில் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய வகையில் இருக்கலாம். OIS உடன் இரட்டை பின்புற கேமராவுடன், 64MP முதன்மை மற்றும் 13MP அல்ட்ரா-வைட் கேமரா இருக்கக்கூடும். அதே சமயத்தில் 16MP செல்பி கேமராவையும் வழங்கக்கூடும். மேலும், 4,500mAh பேட்டரி திறன்கொண்ட, 27W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் கொண்டு வரலாம்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now