AMD Layoffs: ஏஐ தொழில்நுட்பத்தால் 1,000 பேருக்கு பறிபோகும் வேலை.. ஏஎம்டி நிறுவனம் அதிரடி..!
ஏஎம்டி தனது ஏஐ சிப் மேம்பாட்டில் கவனம் செலுத்தவும், வளங்களை மேம்படுத்தவும் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
நவம்பர் 14, சாண்டா கிளாரா (Technology News): ஏஐ சிப் சந்தையில் தொழில்துறையின் முன்னணி நிறுவனமான என்விடியாவுடன் (NVIDIA) போட்டியிட ஏஎம்டி-யின் (AMD) முயற்சிகள் சவால் நிறைந்ததாக உள்ளது. இந்த 2024-ஆம் ஆண்டில், என்விடியாவின் பங்குகள் கிட்டத்தட்ட 200% உயர்ந்துள்ளது. அதேசமயம் ஏஎம்டி-யின் பங்குகள் 5% குறைந்துள்ளது. இதன் பெர்சனல் கம்ப்யூட்டர் பிரிவில் 29% வளர்ச்சி இருந்தபோதிலும், நிறுவனத்தின் கேமிங் பிரிவு ஆண்டுக்கு ஆண்டு குறிப்பிடத்தக்க 69% சரிவைக் கண்டுள்ளது. Retail Inflation Rises: ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு.. சில்லரை பணவீக்கம் அதிகரிப்பு..!
இருப்பினும், ஏஎம்டி அதன் அடுத்த தலைமுறை MI350-சீரிஸ் சிலிக்கான் பற்றி நம்பிக்கையுடன் உள்ளது. இது 2025-ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தப்பட்டு ஏஐ செயல்திறனில் (AI Technology) குறிப்பிடத்தக்க அதிகரிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏஎம்டி நிர்வாக இயக்குனர் லிசா சு (AMD CEO Lisa Su), நிறுவனத்தின் Q3 வருவாய் அழைப்பின் போது, நிறுவனம் அதன் அடுத்த ஜென் செயலிகளை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில், ஏஎம்டி தனது உலகளாவிய பணியாளர்களை தோராயமாக 4% குறைக்கும் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். மேலும், சிப்மேக்கர் சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் (Layoffs) செய்யவுள்ளது.