Wholesale Price Inflation Rises (Photo Credit: Pixabay)

நவம்பர் 13, சென்னை (Technology News): ரூபாயினுடைய வாங்கும் சக்தி குறைவதையே பணவீக்கம் என்கிறோம். உதாரணமாக இதற்கு முன்பு 10 ரூபாய்க்கு வாங்கிய பொருளை 20 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டி இருக்கும். இங்கே பொருளின் மதிப்பு அதிகமாகி பணத்தின் திறன் குறைந்திருக்கிறது. அதன்படி இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 5.49 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், அக்டோபர் மாதத்தில் 6.21 சதவீதமாக அதிகரித்துள்ளது. Traffic Violation In Bengaluru: போக்குவரத்து விதிமீறலால் ரூ. 30.57 லட்சம் அபராதம்.. போக்குவரத்து காவல்துறை அதிரடி..!

உணவுப் பொருள்கள் சார்ந்த பணவீக்கம் அக்டோபரில் 9.69 சதவீதமாகவும், கிராமப்புற சில்லரை பணவீக்கமும் 6.68 சதவீதமாகவும் நகர்ப்புற பணவீக்கமும் அக்டோபரில் 5.26 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 5.05 சதவீதமாக இருந்தது. இந்த சில்லரை பணவீக்க உயர்வு, இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) 6 சதவீதம் என்ற மதிப்பீட்டின் அளவை விட அதிகரித்துள்ளது.