Refrigerators buy Tips: பிரிட்ஜ் வாங்க போறிங்களா?.. எந்த பிரிட்ஜ் தேர்ந்தெடுக்க போறீங்க?.. இந்த செய்தி உங்களுக்குத்தான்.!
இன்றளவில் வீடுகளில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகிவிட்டது பிரிட்ஜ். நாம் வாங்கும் காய்கறிகளை குளிர்ச்சியூட்டி பாதுகாக்கவும், சமைத்த உணவுகள், மாவுகளை பதப்படுத்தவும் உதவி செய்கிறது.
டிசம்பர், 11: இன்றளவில் வீடுகளில் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாகிவிட்டது பிரிட்ஜ் (Refrigerators). நாம் வாங்கும் காய்கறிகளை குளிர்ச்சியூட்டி பாதுகாக்கவும், சமைத்த உணவுகள், மாவுகளை பதப்படுத்தவும் உதவி செய்கிறது.
என்னதான் அன்றைய நாட்களில் இயற்கையான உணவுகளை சாப்பிட்டு, இயற்கையாக காய்கறிகளை உலர்த்தி உபயோகம் செய்தாலும், இன்றளவில் பிரிட்ஜின் பயன்பாடு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. ஆதலால் பிரிட்ஜ்களில் உள்ள பல வகையான நிறுவனங்களில் சிறந்தது குறித்து இன்று காணலாம்.
சாம்சங் RR21T2H2XCR 198 லிட்டர் பிரிஜ் (Samsung RR21T2H2XCR 198 Ltr Single Door): இந்தியாவில் ரூ.15,590 க்கு விற்பனை செய்யப்படும் சாம்சங் நிறுவனத்தின் 198 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரிட்ஜ், ஓரேயொரு கதவு கொண்ட பிரிட்ஜ் ஆகும். 2 பேர் உள்ள ஜோடிகளுக்கு இது சிறந்த பிரிட்ஜ் ஆகும். மின்சார சிக்கனம் கொண்ட 4 ஸ்டார் பிரிட்ஜாக சாம்சங் RR21T2H2XCR 198 Ltr உள்ளது. #Women’s Health:பெண்கள் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?.. இவை சாப்பிட்டால்தான் உடல்நலம் பெறலாம்..!
கோத்ரெஜ் ஆர்.டி யூ.என்.ஓ 1854 (Godrej RD UNO 1854 PTI 185 Ltr Single Door): இந்தியாவில் ரூ.13,990 க்கு விற்பனை செய்யப்படும் கோத்ரெஜ் நிறுவனத்தின் பிரிஜ், 185 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இது 4 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பிரிட்ஜ் என்பதால், குறைந்த அளவே மின்சாரத்தை ஈர்க்கும்.
எல்.ஜி ஜி.எல் 190 லிட்டர் (LG GL-B201APZY): இந்தியாவில் ரூ.16,060 க்கு விற்பனை செய்யப்படும் எல்.ஜி நிறுவனத்தின் பிரிட்ஜ், 190 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். இது 5 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பிரிட்ஜ் என்பதால் மின்சாரத்தை குறைந்தளவே உபயோகம் செய்யும்.
வேர்பூல் ஐ.எப் 265 லிட்டர் (Whirlpool IF CNV 278 ELT 265 Ltr Double Door): இந்தியாவில் ரூ.26,490 க்கு விற்பனை செய்யப்படும் வேர்பூல் நிறுவனத்தின் பிரிட்ஜ், 265 லிட்டர் கொள்ளளவு கொண்டது ஆகும். 3 ஸ்டார் ரேட்டிங் கொண்ட பிரிட்ஜ், டபுள் டோர் வசதி கொண்டது என்பதால் பலராலும் விரும்பப்படுகிறது.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 05:36 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)