Cognizant: 2 இந்திய பெண்கள் உட்பட 6 பேருக்கு முக்கிய பதவியை வழங்கி கௌரவித்தது காக்னிசன்ட் நிறுவனம்; கொண்டாட்டத்தில் ஊழியர்கள்.!

கடந்த 18 மாதங்களில் தனது 3 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களுக்கு ஊதிய உயர்வை அடுத்தடுத்து வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த காக்னிசன்ட் நிறுவனம் அடுத்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது.

Cognizant (Photo Credit: Twitter)

ஜூலை 19, புதுடெல்லி (New Delhi): ஐ.டி துறையில் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் காக்னிசன்ட், தனது நிறுவனத்தில் 2 இந்தியர்கள் உட்பட 6 பேருக்கு பதவி உயர்வு வழங்கி இருக்கிறது. இவர்கள் 6 பேரும் பெண்கள் ஆவார்கள்.

பன்முகத்தன்மையை மேம்படுத்துவது, திறமைகளை சேர்ப்பது, பணியாளர்களை ஊக்குவிப்பது, தக்கவைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு நிறுவனத்தை வளர்ச்சியடைய வைக்க வேண்டும் என வரும் காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார். David Warner: “என்னை கிண்டலடித்தால் நான் ரசிப்பேன்” – இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடிக்கும் விஷயம் குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்..!

சைலஜா ஜோஸ்ஃயுலா Intuitive Operations & Automation (IOA) அதிகாரியாகவும், வங்கிசேவை மற்றும் காப்புறுதி துறையில் பணியாற்றி வந்து, கடந்த 2018ல் காக்னிசண்ட் நிறுவனத்தில் ஹைதராபாத் பிரிவில் தலைவராக இருந்த அவருக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1996 முதல் பணியாற்றிய அர்ச்சனா ரமணகுமார் காக்னிசண்ட் நிறுவனத்தில் இருந்து 2020ல் விலகி, பின் மீண்டும் அந்நிறுவனத்தில் இணைந்தார். தற்போது அவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எலிசா அந்நிறுவனத்தின் CLRM அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.