Dell Limitations For WFH Employees: "வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு இல்லை" - மெமோ கொடுத்து ஊழியர்களிடம் அதிரடி காண்பித்த டெல்.!
கொரோனா காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறைக்கு, கூடிய விரைவில் பெருநிறுவனங்கள் அனைத்தும் முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 18, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் மடிக்கணினி உட்பட மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பன்னாட்டு நிறுவனம் டெல் (Dell). உலகளவில் 1.6 இலட்சம் பணியாளர்களுடன் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில், இந்தியாவில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் வரை வேலை பார்த்து வருகின்றனர். கடந்த கொரோனா காலத்தில் பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.
கொரோனா கானல் நீரானதால் மீண்டும் அலுவலகத்தில் வேலை: அதனைப்போல, டெல் நிறுவனமும் தனது பணியாளர்களின் நலன்கருதி வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வாய்ப்பை வழங்கிய நிலையில், தற்போது பணியாளர்கள் பலரையும் நேரடியாக (Work From Home) அலுவலகத்தில் வந்து பணியாற்ற அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, குறைந்தபட்சம் 3 - 4 நாட்கள் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. Bagalkot Shocker: சிறுமியை பள்ளி வளாகத்தில் நிர்வாணப்படுத்தி சோதனைப்போட்ட ஆசிரியர்கள்; மனமுடைந்த சிறுமி தற்கொலை.!
வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பதவி உயர்வு கிடையாது: இந்நிலையில், டெல் நிறுவனம் தனது பணியாளர்கள் பலருக்கும் மெமோ வழங்கி இருக்கிறது. குறிப்பாக வீட்டில் இருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மெமோவில், வீடுகளில் இருந்து பணியாற்றுவோர் இனி (Work From Office Promotion) அலுவலகம் வந்து பணியாற்ற முயற்சிக்க வேண்டும். வீட்டில் இருந்து தொடர்ந்து பணியாற்றும் பட்சத்தில், அவர்களுக்கான எதிர்கால நற்பலன்களாக கருதப்படும் பதவி உயர்வு உட்பட பல விஷயங்களில் உரிய மதிப்பீடுகள் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படிப்படியாக அலுவலகத்திற்கு அழைக்கப்படும் ஊழியர்கள்: கொரோனா காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பணியிட வாய்ப்புகள் அனைத்தும் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அலுவலகத்தில் கிடைக்கும் திறனை மேம்படுத்த மீண்டும் பணியாளர்கள் பணியிடங்களுக்கு அழைக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து 10 - 15% ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றி வருகிறார்கள் என்றும் டெல் நிறுவனத்தின் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.