Twitter Logo: குருவியை தூக்கிவிட்டு நாயை முன்னிறுத்திய எலான் மஸ்க்.. லோகோவை மாற்றி அதிரவைத்த சம்பவம்.!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல மாற்றங்களை கொண்டு வரும் எலான் மஸ்க், அதன் பறவை உருவத்தை மாற்றி நாய் தோற்றத்தை லோகோவாக நிலைநிறுத்தி இருக்கிறார்.
ஏப்ரல் 04, (Twitter Logo): அமெரிக்காவின் சமூக வலைதள பக்கங்களில் ஒன்றாக இருந்து, பின்னாட்களில் உலக அளவில் பிரபலமடைந்த ட்விட்டர் தளத்தை 368 மில்லியன் மக்கள் இன்று உபயோகம் செய்கின்றனர். நாளொன்றுக்கு 340 மில்லியன் ட்விட் சராசரியாக பதிவிடப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் செயல்பட்டு வருகிறது. Delhi Metro: உர்பி ஜாவேத் போல உடையணிந்து டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் இளம்பெண்.. அதிர்ச்சி வீடியோ வைரல்.!
கடந்த 2022 ஜனவரியில் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகி, அதற்கான பேச்சுவார்த்தைகளும் அடுத்தடுத்து நடைபெற்று வந்தன. பின்னர், ஒருகட்டத்தில் அதனை வாங்கும் முடிவில் இருந்து பின்வாங்கிய எலான் மஸ்க், அக் 2022ல் ட்விட்டரை அதிகாரபூர்வமாக வாங்கிவிட்டதாக அறிவித்தார். அதன்பின்னர், தற்போது வரை பல மாற்றங்கள் ட்விட்டரில் செய்யப்பட்டன.
முக்கியஸ்தர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட புளூ டிக் பணம் கொடுத்து பெற வசதிகள் செய்யப்பட்டன. அதன்மூலமாக ஆண்டு அல்லது மாதச்சந்தா முறையில் பணம் செலுத்தி புளூ டிக் பெற அனுமதி வழங்கப்பட்டது. அதேபோல, பயனர்கள் தங்களின் இடுகைகளில் எழுத்துக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ட்விட்டரின் லோகோவை எலான் மஸ்க் உலகளவில் வைரலாக நாயின் முகத்தை மாற்றி இருக்கிறார்.