Gmail Update: ஜி-மெயிலில் தேவையற்ற செய்திகளை ஒரே கிளிக்கில் இனி டெலீட் செய்யலாம்: கூகுள் அதிரடி அறிவிப்பு.!

அலுவலக ரீதியிலான பல்வேறு பணிகளுக்கு முக்கிய பாதுகாப்பு தகவல் பரிமாற்ற அம்சமாக கருதப்படும் ஜி-மெயில், தனிநபர் மற்றும் அலுவலக கணக்குகள் என வெவ்வேறு அம்சங்கங்ளில் உபயோகம் செய்ய வழிவகை செய்யப்படுகின்றன.

Gmail (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 24, புதுடெல்லி (Technology News): உலகளவில் 1.8 மில்லியன் பயனர்கள் ஜி-மெயிலை உபயோகம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மொத்தமாக 870 மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். சர்வதேச அரங்கில் இந்தியாவில் மட்டும் 95% பயனர்கள் ஜி-மெயிலை உபயோகம் செய்வதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

அலுவலக ரீதியிலான பல்வேறு பணிகளுக்கு முக்கிய பாதுகாப்பு தகவல் பரிமாற்ற அம்சமாக கருதப்படும் ஜி-மெயில், தனிநபர் மற்றும் அலுவலக கணக்குகள் என வெவ்வேறு அம்சங்கங்ளில் உபயோகம் செய்ய வழிவகை செய்யப்படுகின்றன.

ஜி-மெயில் மூலமாக ஒருவரிடம் துறை சார்ந்து தனிப்பட்ட முறையிலும், குழுவாகவும் பேச பல வசதிகள் இருக்கின்றன. Mail, Chat போன்ற வசதிகளாலும், தகவல் பாதுகாப்பு போன்ற சிறப்பம்சத்தினாலும் இன்று வரை ஜி-மெயில் தனக்கென தனியொரு இடத்தினை பிடித்து வைத்துள்ளது. Dhruva Natchathiram TrailBLAZEr: துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் சியான் ரசிகர்கள்.! 

ஜி-மெயிலில் பயனர்கள் முன்பு தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்க ஒவ்வொரு முறையும் அவற்றை தனித்தனியே தேர்வு செய்து நீக்கும் வசதி என்பது இருந்தது. இதனை எளிமையாக்க வேண்டும் என பயனர்கள் தொடர்ந்து தங்களின் கோரிக்கைகளை வைத்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது ஜி-மெயில் தேவையற்ற பதிவுகளை நீக்க 50 மின்னஞ்சலை அனைத்தையும் தேர்ந்தெடு (Select All) முறையில் தேர்வு செய்து அழித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நடைமுறை சோதனை ரீதியாக பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவை தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.