Nokia 3210 4G: புத்தம்புது சிறப்பம்சங்களுடன் நோக்கியா 3210 4G போன் அறிமுகம்..! விலை மற்றும் விவரக்குறிப்புகள் இதோ..!
நோக்கியா 3210 4G மொபைல், தற்போது ஜூன் 11-ஆம் தேதி முதல் இந்தியாவில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்துள்ளது.
ஜூன் 11, சென்னை (Technology News): HMD நிறுவனம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு நோக்கியா 3210 4G (Nokia 3210 4G Mobile) மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 3210 ஆனது 4G வசதியுடன் வெளியாகி உள்ளது. மேலும், UPI வசதியை ஆதரிக்கின்றது. 2024 பதிப்பில் புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, புதுப்பிக்கப்பட்ட விவரக்குறிப்புகள் மற்றும் யுடியூப் ஷார்ட்ஸ் போன்ற நவீன பயன்பாடுகளுக்கான ஆதரவுடன் வந்துள்ளது. இதில், நோக்கியா பாம்பு விளையாட்டு, T9 கீபேட், டிராக்பேட் மற்றும் ஒற்றை கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரக்குறிப்புகள் பற்றி இதில் பார்ப்போம்.
விலை மற்றும் விற்பனை விவரம்:
நோக்கியா 3210 4ஜி போனை நிறுவனம் ரூ.3,999-க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது இன்று முதல் (ஜூன் 11) விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய நோக்கியா 3210 4G போனை நிறுவனத்தின் இணையதளம் மற்றும் ஷாப்பிங் தளமான அமேசானில் இருந்து Grunge Black, scuba Blue மற்றும் Y2K Gold வண்ணங்களில் வாங்க முடியும். Minor Boy Death: பானி பூரி சாப்பிட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு; திண்டுக்கல்லில் அதிர்ச்சி.. சாலையோரக்கடை விரும்பிகளே உஷார்..!
சிறப்பம்சங்கள்:
இந்த போனில், 2.4 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இது QVGA பிக்சல் அடர்த்தியை ஆதரிக்கின்றது. இதன் டிஸ்ப்ளேக்கு கீழே T9 கீ பேட் கொடுக்கப்பட்டுள்ளது.
இது, யுனிசாக் டி107 சிப்செட்டில் இயங்கும் S30+ OSல் வெளியிடப்பட்டது. மேலும், 64MP ரேம் மற்றும் 128MP ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இதில், 32GB மெமரி கார்டை நிறுவ முடியும்.
நோக்கியா 3210 4ஜி ஆனது, எல்இடி ஒளியுடன் கூடிய 2MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
வலுவான பேட்டரி பேக்கப்பிற்கு பெயர் போன நோக்கியா 3210 போலவே, இந்த புதிய 4ஜி போனிலும் 9.8 மணிநேரம் தொடர்ந்து அழைப்புகளில் பேசக்கூடிய பேட்டரி வசதி உள்ளது. இந்த மொபைல் 1450mAh பேட்டரி திறனை கொண்டுள்ளது.
இந்த போனில் இரண்டு 4ஜி சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். மேலும், USB Type-C போர்ட்டை வழங்கியுள்ளது. இதனுடன், புளூடூத் 5.0 மற்றும் 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் கிடைக்கின்றது. அதனுடன், மொபைலில் 1 ஸ்பீக்கர் மற்றும் 1 மைக் உள்ளது.
யூடியூப் மற்றும் MP3 பிளேயர் மற்றும் FM ரேடியோ வழங்கப்பட்டுள்ளது. இது வயர்லெஸ் மூலமாகவும் இயக்கப்படுகிறது. இதில், பாம்பு கேம் கொடுக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 3210 4G போனில் இருந்து UPI பணம் செலுத்தலாம். இந்த மொபைலில் உள்ளமைக்கப்பட்ட ஸ்கேன் மற்றும் ஆன்லைன் பணம் செலுத்துதல் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்த மிக முக்கிய சிறப்பம்சமாக உள்ளது.