Honor X60i: ஹானர் 'X' சீரிஸ் ஸ்மார்ட் போன் விரைவில் அறிமுகம்..! அதன் புகைப்படம் வெளியீடு..!
சீனாவில் வருகின்ற ஜூலை 26-ஆம் தேதி அன்று ஹானர் X60i ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளது.
ஜூலை 16, சென்னை (Technology News): இந்தியாவில் வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி அன்று Honor 200 மற்றும் Honor 200 pro ஆகிய ஸ்மார்டபோன்கள் அறிமுகமாக உள்ளது. இந்த இரண்டு போன்களும் இந்திய சந்தையில் வருவதற்கு முன்பு, அதே பிராண்டின் ‘X‘ சீரிஸில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஹானர் X60i (Honor X60i Smart Phone) ஸ்மார்ட்போன், சீன சான்றிதழ் தளமான TENAA-யில் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் புகைப்படம், விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆகியவை இந்த இணையதளத்தில் கசிந்துள்ளன. அதன் விவரங்களை இதில் பார்க்கலாம்.
விலை:
TENAA பதிவின் படி, Honor X60i இரண்டு ரேம் வகைகளில் வெளியிடப்படும். 8GB ரேம் கொண்ட 256GB ஸ்டோரேஜ் வசதியுடன் இந்த போன் வழங்கப்படும். இதன் விலை 1699 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ. 19,500. மொபைலின் 12GB ரேம் மாடல் 256GB மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதியுடன் வெளியிடப்படலாம். இதன் விலை 1899 யுவான் மற்றும் 2099 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் விலை முறையே ரூ.21,900 மற்றும் ரூ. 24,000 ஆகும். இந்த மொபைல் ஜூலை 26-ஆம் தேதி அன்று சீனாவில் Phantom Night Black, Cloud Water Blue, Moon Shadow White மற்றும் Coral Purple வண்ணங்களில் கிடைக்கும். Husband Dies By Suicide: மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் குழந்தையை கொன்றுவிட்டு, கணவர் தற்கொலை.. உறவினர்கள் சோகம்..!
சிறப்பம்சங்கள் (கசிவின்படி):
இந்த ஸ்மார்ட்போனில் 1080 x 2412 பிக்சல் அடர்த்தி கொண்ட 6.7 இன்ச் FullHD+ டிஸ்ப்ளேவுடன், திரை IPS LCD பேனலில் தயாரிக்கப்படும். அதில் கேப்ஸ்யூல் வடிவ நாட்ச் கொடுக்கலாம்.
இது ஆண்ட்ராய்டு 14-யில் வெளியாகும் மற்றும் MagicOS 8.0-யில் வேலை செய்யும். மேலும், MediaTek Dimensity 6080 ஆக்டாகோர் சிப்செட்டை இந்த ஸ்மார்ட்போனில் காணலாம். இது 2.4 ஜிகாஹெர்ட்ஸ் கடிகார வேகத்தில் இயங்கும் தன்மை கொண்டது.
இதில், இரட்டை பின்புற கேமராவுடன் 50MP முதன்மை சென்சார் மற்றும் 2MP இரண்டாம் நிலை லென்ஸைக் காணலாம் மற்றும் முன் பேனலில் 8MP செல்பி சென்சார் வழங்கப்படலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி திறன் கொண்ட, 35W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உடன் வரலாம். மொபைலின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)