IPL Auction 2025 Live

Washing Machine: இல்லத்தரசிகளே.. வாஷிங் மெஷின் வாங்க போறீங்களா?.. இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு போங்க.!

அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.

Respective: Washing Machine

டிசம்பர், 11: நமது உடை (Clothes) என்றுமே நமக்கு தனி சிறப்பை தரும். இடம், பொருள், ஏவல் என்பது நா பேச்சுக்கு மட்டுமல்ல ஆடைக்கும் பொருந்தும். இவ்வாறாக எங்கும் ஆடையின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. அவரவரின் வேலையை பொறுத்து ஆடையில் அழுக்கு சேரும். இதில் இருக்கும் அழுக்குகளை எளிதில் நீக்க முன்பு சோப்பு கொண்டு துணிகளை துவைத்தோம். அதற்கும் முன்பு கிணறுகளில் அல்லது ஆறுகளில் சாதரணமாக துணியை நீரில் நன்கு அலசி காயவைத்து உபயோகம் செய்து வந்தோம்.

தொழில்நுட்பம் வந்துவிட்ட காலத்தில் துவைப்பதற்கு இயந்திரங்களும் (Washing Machines) வந்துவிட்டன. அவ்வகையில் இந்தியாவில் எங்கு திரும்பினாலும் காணப்படும் மின்சாதன பொருட்கள் ஷோ ரூமில் வாஷிங் மெஷின்கள் பல நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளவை விற்பனைக்கு உள்ளன. இன்று வாஷிங் மெஷின் குறித்த பல தகவலை நாம் தெரிந்துகொள்ளலாம்.

வாஷிங் மெஷினில் 6 கிலோ, 8 கிலோ என்ற வகையில் துணிகளை துவைக்கும் எடைக்கேற்ப திறன் & விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதில் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் (Automatic & Manual) என்ற ரகங்களும் உள்ளன. ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்க போட்டதும், துவைத்து பிழிந்து வெளியில் தள்ளும்.

மேனுவலில் துணிகள் துவைத்து மட்டுமே கொடுக்கும். பின்னர் அதனை கைகளால் எடுத்து பிழிந்து காயவைத்துக்கொள்ளலாம். இதில் ப்ரண்ட் லோடிங், டாப் லோடிங், டிவின் டப் / புள் ஆட்டோமேட்டிக் என்ற பல ரகங்கள் உள்ளன. இதில் தண்ணீர் மற்றும் மின்சார சிக்கனம் கொண்டவை எவை என தெரிந்துகொள்ளும் பட்சத்தில் நீங்கள் அதனை வாங்கலாம்.

ப்ரண்ட் லோடிங் (Front Loading Washing Machine): ப்ரண்ட் லோடிங் மெஷினில் துணிகளை முன் பக்கம் வழியே மெஷினுக்குள் அனுப்பலாம். இது துணிகளை கைகளால் துவைப்பது போன்று செயலாற்றும். துணிகள் சிக்காது. துணிகளும் நீண்ட நாட்கள் வரும். துணிகள் அதிவேகத்தில் உலரவைக்கப்படும். குறைந்தளவு தண்ணீர் மற்றும் சோப்பு நீர் தேவைப்படும். மெஷின் இயங்கும் சமயத்தில் சப்தம் என்பது இருக்காது. விலை அதிகம் என்றாலும் கட்டாயம் பிற வகைகளில் பலன் தரக்கூடியது. Tinnitus Problem: உங்களுக்கு எந்த நேரமும் காதில் எதோ சத்தம் கேட்குதா?.. அச்சச்சோ இந்த நோய் பாதிப்பாக இருக்கலாம்.. கவனமாக இருங்கள்.! 

Washing Machine - Front Loading Type

டாப் லோடிங் (Top Loading): டாப் லோடிங் மெஷினில் மேல் இருந்து துணிகளை துவைக்க அனுப்புவது ஆகும். இதன் டர்பன் பிளேடுகள் திசைகளை மாற்றி சுழற்சி துணிகளை துவைக்கும் என்பதால், துணிகள் விரைந்து சேதமாகும். மெஷின் இயக்கத்தின்போது ஓசை ஏற்படும். அதிக தண்ணீர் செலவாகும். ஆனால் விலை குறைவு. ப்ரண்ட் லோடிங் மெஷினின் விலையை ஒப்பிட்டால் டாப் லோடிங் மெஷின் மிகக்குறைவு.

ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் (Automatic): ப்ரண்ட் லோடிங் வாஷிங் மெஷின்கள் பெரும்பாலும் ஆட்டோமேட்டிக் தான். இதனுள் பல அம்சங்கள் இருக்கின்றன. வேகம், அமைப்புகள் பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

மேனுவல் வாஷிங் மெஷின் (Manual): டாப் லோடிங் மெஷின்கள் மேனுவல் திறன் கொண்டதாகவே கிடைக்கும். இது 2 டேப்களை கொண்டுள்ளது. ஒன்று துணிகளை துவைக்கவும், மற்றொன்று துவைத்த துணியை உலர்த்தவும் செய்கிறது. இதில் ஸ்பின் பிளேடுகள் மெலிதாக இருப்பது துணிகளை ஈரத்தினை பெருமளவு குறைக்காது.

சென்சார் & மின்சாரம் (Sensor & Electricity): இன்றளவில் இருக்கும் வாஷிங் மெஷின்களில் நவீன தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளதால், மெஷினின் அதிர்வை கண்காணிக்க சென்சார்களும் உள்ளன. 6 கிலோ எடையுள்ள வாஷிங் மெஷினுக்கு 25 - 35 லிட்டர் தண்ணீர் செலவாகும். வாஷிங் மெஷினில் இருக்கும் நீரை சூடேற்ற மின்சாரம் தேவைப்படுகிறது.

நாம் துணியை துவைக்க தேந்தெடுக்கும் வெப்பத்தின் அளவை பொறுத்து மின்தேவையையும் இருக்கும். ப்ரண்ட் லோடிங் மெஷினுக்கு குறைந்தளவே மின்சாரம் தேவைப்படும். 40 டிகிரி வெப்பத்தை தேர்வு செய்வது நல்லது.

டிரையர் (Draier): இன்றளவில் ஆட்டோமேட்டிக் மெஷின்களில் டிரையரும் உள்ளது. மெஷினில் துணிகள், சோப்பு தூள்களை போட்டு ஆன் செய்தால் துணிகள் சிலமணிநேரத்தில் துவைக்கப்பட்டு உலர்ந்த பின்னர் தூய்மையாக வெளியே வரும். அவற்றை எடுத்து நாம் மடித்து வைத்துக்கொள்ளலாம். ஆகையால் உங்களுக்கு தேவையான வாஷிங் மெஷினை பயன்படுத்துங்கள்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் டிசம்பர் 11, 2022 12:23 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).