Bikini Marriage: பிகினி உடையில் மணக்கோலத்தில் திருமணம் செய்த இளம்பெண்.. இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சம்பவம்.!

இந்திய திருமணங்களின் சடங்குகளை கேளிப்படுத்தும் நோக்கத்துடன், ஏஐ உருவாகிய புகைப்படம் தவறான தகவலுடன் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Bikini Marriage | Deepfake Pic (Photo Credit: @SamSiff X)

டிசம்பர் 01, கான்பூர் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, பனராசி பகுதியில் திருமணம் ஒன்று நடைபெற்றதாகவும், அந்த திருமணத்தில் மணப்பெண் பிகினி எனப்படும் உள்ளாடையுடன் மணவேடம் பூண்டு திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல்கள் வைரலாகி வந்தன. இந்த விஷயம் குறித்து உண்மைத் தன்மையை விசாரிக்கும்போது, அது ஏஐ தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டது என்பது தெரியவந்தது.

பாரம்பரிய திருமணங்கள்:

இந்திய திருமணங்கள் என்பது மிகுந்த பாரம்பரியம் கொண்டதாக கவனிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்னரில் இருந்து தொடங்கும் சடங்குகளும், அதன் பின்னணியும் கொண்டாட்டமாக களைகட்டும். தென்மாநிலங்களை விட வடமாநில திருமணங்கள் என்பது மிகுந்த கட்டுப்பாடு மற்றும் விமர்சைகள் கொண்டதாகவும் இருக்கிறது. இன்றளவில் நாகரீகத்தின் வளர்ச்சிக்கேற்ப, திருமணங்கள் புதுமை கண்டாலும் ஆடம்பரத்திற்கு பஞ்சமில்லை.

கடும் விவாதம்:

இதனிடையே தான், திருமண மணப்பெண் ஒருவர் உள்ளாடையுடன் மணமகன் ஒருவரை திருமணம் செய்வது தொடர்பான புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த புகைப்படம் கான்பூரில் நடைபெற்ற திருமண விழாவில் எடுக்கப்பட்டதாக வைரலாகியது. இந்த விஷயம் கடுமையான விவாதத்தை எதிர்கொண்ட நிலையில், அந்த புகைப்படம் போலியானது என்பது தெரியவந்துள்ளது. Father Kills Daughter: மாற்றுத்திறன் மகளை கொன்று, தந்தை தூக்கிட்டு தற்கொலை.. வேலையின்மை விரக்தியால் சோகம்.! 

திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு:

வயது வந்தோருக்கான பக்கத்தில் சர்ச்சைக்குரிய தலைப்புடன் வெளியான புகைப்படம், இவ்வாறான தகவலுடன் பகிரப்பட்டு இருக்கிறது. இந்த புகைப்படம் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பதிவு செய்யப்பட்டது உறுதியானது. அவதூறான எண்ணத்துடன், ஆபாச செயல்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு புகைப்படம் வைரலாக்கப்பட்டுள்ளது. டீப்பேக் (Deepfake AI) எனப்படும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்ச்சைக்குரிய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடரும் ஏஐ டீப் பேக் சர்ச்சை:

முன்னதாக பல நடிகைகளின் சில அரைநிர்வாண வீடியோ டீப்பேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எடிட் செய்யப்பட்டு வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது திருமணம் குறித்த சர்ச்சை புகைப்படம் வெளியாகியுள்ளது. வெளிநாட்டிலும் நடைபெறாத கேலிக்கூத்தாக, இந்திய கலாச்சாரங்களை அவதூறாக சித்தரிக்கும் முயற்சி சமீபத்தில் அதிகம் நடக்கிறது. இது பாரம்பரியத்தை அழிக்கும் செயல்முறை எனவும் பழமை கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான பதிவு:



00" height="600" layout="responsive" type="mgid" data-publisher="bangla.latestly.com" data-widget="1705935" data-container="M428104ScriptRootC1705935" data-block-on-consent="_till_responded"> @endif