Cyber Attack India: 3 மாதங்களில் 2 ஆயிரம் சைபர் தாக்குதலை எதிர்கொண்ட இந்தியா; மக்களே உஷாரா இருங்க.!

இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல முயற்சிகள் மேற்கொண்டாலும் குற்றம் இழக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் அவை பெருமளவில் சாத்தியமில்லாமல் போகிறது.

Cyber Attack (Photo Credit: Pixabay)

மே 06, புது டெல்லி (Technology News): 2023ம் ஆண்டு தொடங்கி 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், முதல் மூன்று ஆண்டுகளில் நடந்த சைபர் குற்றங்களின் (Cyber Attacks) எண்ணிக்கை 2,108 என்பது தெரியவந்துள்ளது. அதாவது இந்த எண்ணிக்கை வாரத்திற்கு 18% என அதிகாரிகளால் கணிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் முதல் மாதத்தில் வாரத்திற்கு 7% சைபர் குற்றங்கள் நடந்துள்ளன. அதன்படி வாரத்திற்கு சராசரியாக 1,248 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் சென்னையில் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் பாகத்தில் அதிகமான சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. Insta Reel Video Death: இரயில் வரும்போது தண்டவாளத்தில் ரீலிஸ் வீடியோ எடுத்த 16 வயது சிறுவன் பரிதாப பலி.. நண்பர்கள் கண்முன் நடந்த கொடூரம்.!

சைபர் தாக்குதல் காரணமாக வாரத்தில் 2,507 நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் முதலில் சைபர் புள்ளிகளால் தகப்படுகிறது என்றல், அதற்கடுத்தபடியாக இராணுவ விவகாரங்களை திருடவும் பல்வேறு முயற்சிகள் நடந்து வந்துள்ளன. கடந்த ஆண்டுகளை காட்டிலும் சைபர் தாக்குதல்கள் வெகுவாக அதிகரித்து வருகிறது எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

நவீன உலகில் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள் இணையவழியில் மேற்கொள்ளப்படும் சூழலில், அது சம்பந்தமான துறையிலும் சைபர் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஆப்ரிக்காவில் அதிகப்படியான நிறுவனங்கள் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகின்றன. வளர்ந்த மேலை நாடாக கருதப்படும் அமெரிக்காவிலும், வட அமெரிக்காவில் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன.