IND SMART App: இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களே.. பழைய செயலி விரைவில் முடக்கம்.. புதிய செயலியை டவுன்லோட் பண்ணிடீங்களா?.. விபரம் உள்ளே.!

இண்டிஸ்மார்ட் செயலியின் சேவை முன்னதாகவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், அதனை பயன்படுத்த தொடங்காத பயனர்களுக்கு அச்செயலியின் சேவை நிறைவுக்கு வருவதாக இந்தியன் வங்கி தரப்பில் அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளது.

IndSmart App | Indian Bank Mobile Application (Photo Credit: Google Playstore).

அக்டோபர் 24, சென்னை (Technology News): இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வாடிக்கையாளர்களை கொண்ட வங்கிகளில், இந்தியன் வங்கி (Indian Bank) முதன்மையான இடத்தில் இருக்கிறது. கடந்த 1907ம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்ட இந்திய வங்கி இன்று 100 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டு, 41,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்திய அளவில் 5,847 கிளைகளுடன் 4,937 ஏடிஎம் சேவைகளையும் இந்தியன் வங்கி வழங்குகிறது. கிட்டத்தட்ட 117 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட இந்தியன் வங்கி, இன்று மத்திய அரசின் நேரடி கண்காணிப்பின் கீழ், பொதுத்துறை வங்கியாக செயல்பட்டு வருகிறது. SSGN Cruise Missile Nuclear Submarine: இந்தியாவின் 4-வது அணு ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்.. ஏவுகணை சோதனை வெற்றி.! 

இந்தியன் வங்கியின் செயலி:

டிஜிட்டல் மாயாக்கப்பட்டு வரும் இந்திய பணபரிவர்த்தனைகளில், இந்தியன் வங்கியின் செயல்பாடுகளை ஊக்குவிக்க முன்னதாக இந்தோ ஆசிஷ் (INDOASIS) எனப்படும் செயலி இந்தியன் வங்கி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. இந்த செயலியின் வாயிலாக பயனர் தனது கணக்கின் பணம் அனுப்புதல், பெறுதல், இருப்பு கண்காணிப்பு, வரவு-செலவு கண்டறிதல், மின்னஞ்சல் மற்றும் அலைபேசி எண் புதுப்பிப்பு போன்ற பல்வேறு விஷயங்களை செய்துகொள்ளும் வகையில், எளிமையாக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, INDOASIS செயலி IND SMART செயலியாக புதுப்பிக்கப்பட்டது. Samsung Galaxy Ring: "ஸ்மார்ட் வாட்ச்-க்கு விடுதலை" - புதிய பரிணாமத்துடன் களமிறங்கும் சாம்சங் கேலக்சி ஸ்மார்ட் ரிங்.. அசத்தல் விபரம் இதோ.!

புதிய ஸ்மார்ட் செயலி:

பல இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்கள் பழைய செயலியில் இருந்து புதிய செயலுக்கு மாறாமல் இருக்கின்றனர். இதனால் விரைவில் INDOASIS செயலியின் சேவை முடிவுக்கு வரும் நிலையில், அதனை வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக நினைவூட்டும் பணியில் இந்தியன் வங்கி நிர்வாகம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வாடிக்கையார்களுக்கு அறிவுறுத்தலுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கூகுளின் பிளே ஸ்டோரில் IND SMART என தேடினால் வரும் இந்தியன் வங்கியின் செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து, தங்களின் தகவலை பதிவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் உங்களுக்காக IND Smart செயலியின் முதற்கட்ட பதிவிறக்கம் மற்றும் பிற விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இன்று வரை INDOASIS செயலி பயன்படுத்துவோர், அதனை நீக்கம் செய்துவிட்டு INDSMART செயலுக்கு மாறுவது நல்லது. இல்லையேல் அச்சேசேவை முடித்துக்கொள்ளப்படும்போது பணப்பரிவர்த்தனை செய்ய, உள்நுழைய இயலாது. சில நேரம் நீங்கள் யுபிஐ சேவையை இணைத்து வைத்திருந்தால், அதன் சேவையும் பாதிக்கப்படலாம்.

இந்தியன் வங்கியின் Ind SMART செயலியை உடனே பதிவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்: https://play.google.com/store/apps/details?id=com.iexceed.ib.digitalbankingprod&pcampaignid=web_share