அக்டோபர் 18, டெல்லி (Technology News): சாம்சங் நிறுவனம் (Samsung) கேலக்ஸி ரிங் (Galaxy Ring) என்ற பெயரில் மோதிரத்தையே ஒரு கேஜெடட்டாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இதன் எடை 2.3-3.0 கிராம் மட்டுமே. இந்த ஹைடெக் ஸ்மார்ட் மோதிரம் ரூ.5000 முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. மூன்று நிறங்களில் ஒன்பது வெவ்வேறு அளவுகளிலும் சாம்சங் கேலக்ஸி ரிங் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் ரிங் ஆனது சாம்சங் ஹெல்த் இயங்குதளத்துடன் இணைக்க முடியும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் நமது இதயத் துடிப்பு மானிட்டர் செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இதுதவிர ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு, தூங்கு முறை, நாம் செய்யும் உடற்பயிற்சி போன்ற அனைத்தையும் கண்காணிக்கும் சென்சார் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. Airbus Layoffs: 2500 பேரின் வேலைக்கு ஆப்பு.. பணிநீக்கம் செய்ய ஆயத்தமாகும் ஏர்பஸ் நிறுவனம்.. அதிர்ச்சியில் ஊழியர்கள்..!
சாம்சங் கேலக்ஸி ரிங் மாடலை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கொடுக்கும். இது போன்ற ஸ்மார்ட் ரிங் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் இருப்பதால் எதிர்காலத்தில் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு வேலை இருக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் Galaxy AI என்ற அம்சம் இந்த மோதிரத்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கிறது. இது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளதை முன்னிட்டு, அக்டோபர் 18-க்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு 25 வாட்ஸ் அடாப்டர் இலவசமாக வழங்கப்படும் என சாம்சங் அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் கேலக்ஸி ஸ்மார்ட் மோதிரத்தின் விலை ரூ. 38,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.