Smartphone Battery Tips: புதிய செல்போன் வாங்கியதும் 8 மணிநேரம் கட்டாயம் சார்ஜ் போடணுமா?.. உண்மை என்ன?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க., தவறு செஞ்சிடாதீங்க..!
ஸ்மார்ட்போன் யுகத்திற்கு பழகிவிட்ட நமக்கு செல்போன் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலை வந்துவிட்டது. அந்த செல்போனை இயக்க உதவி செய்யும் பேட்டரியின் நலன் குறித்த சிறப்பு செய்தித்தொகுப்பு இதோ.. உங்களுக்காக..,

ஜனவரி 18: தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் (Technology) ஸ்மார்ட்போன்களின் பயன்பாடுகள் வெகுவாக அதிகரித்துவிட்ட நிலையில், தினமும் இலட்சக்கணக்கான ஸ்மார்ட்போன்கள் (Smartphones) இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் நபர்களுக்கு கடைக்காரர்கள் எப்போதும் முதலில் ஒரு அறிவுரை வழங்குவார்கள்.
அது என்னவென்றால், "போனை 6 மணிநேரம் முதல் 8 மணிநேரம் வரை (Use Mobile After 8 Hours Charging) சார்ஜ் போட்டு உபயோகம் செய்யுங்கள்" என்பது தான். இதனை கேட்காமல் போன் வாங்கிய வாடிக்கையாளர்கள் கடையை விட்டு வந்ததே இல்லை என்று கூறலாம். ஆனால், அது எதற்காக? என நமக்கு தெரியாது.
வாய் பேச்சில் அப்போதுதான் பேட்டரி நீண்ட நாட்கள் (Battery Life) தாங்கும், நீண்ட நேர பேட்டரி பயனை உபயோகம் செய்யலாம் என கூறுவார்கள். இன்று அதற்கான அறிவியல் ரீதியிலான தெளிவை அடைந்துகொள்ளுங்கள். Kadayanallur Accident: மதுபோதையில் காரை இயக்கியதால் விபத்து.. மகளின் மஞ்சள் நீராட்டுவிழாவுக்கு பத்திரிகை வைக்க சென்ற பெண் மரணம்..!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புதிதாக செல்போன் வாங்கியதும் அதனை Switch Off செய்து சார்ஜ் ஏற்றும் வழக்கத்தை கொண்டிருப்போம். ஸ்மார்ட்போன்களை பொறுத்தமட்டில் அவை நிக்கல் கேட்மியம், லித்தியம், லித்தியம் பாலிமர் (Nickel Cadmium, Lithium, Lithium Polymer) வேதிப்பொருட்களால் பேட்டரிகளை பெற்றிருக்கும்.
சமீபத்தில் லித்தியம் ஐயான், லித்தியம் ஐயான் பாலிமர் (Lithium Ion, Lithium Ion Polymer) பேட்டரிகளே ஸ்மார்போன்களில் உபயோகம் செய்யப்படுகிறது. முந்தைய காலங்களில் உபயோகம் செய்யப்பட்ட நிக்கல் காட்மியம் பேட்டரிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.
நிக்கல் காட்மியம் பேட்டரிகளை பொறுத்தமட்டில், அவை முதலில் சார்ஜ் செய்யப்படும்போது அடையும் அதிகபட்ச திறன் அளவினை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை ஆகும். இதனாலேயே அன்றைய நாட்களில் புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கியோரை குறைந்தது 8 மணிநேரம் சார்ஜ் ஏற்ற அறிவுறுத்தினார்கள். Pest in Liquor: “சாகத்தான் குடிக்கிறன், அதிலும் பூச்சியா?”.. விரக்தியில் பொங்கி மாற்று மதுபானம் வாங்கி ஊற்றிய குடிமகன்.. வைரல் வீடியோ.!
நாம் பழைய நிக்கல் காட்மியம் பேட்டரியை 8 மணிநேரம் சார்ஜ் ஏற்றும்போது, பேட்டரிகள் தனது (Charging Cycle ) அதிகபட்ச கொள்ளளவினை அடையும். பேட்டரியின் திறன் அதிகமாகும். தற்போது நிக்கல் காட்மியத்தின் பேட்டரி பயன்பாடு என்பது வெகுவாக குறைந்து, லித்தியம் ஐயான் & லித்தியம் பாலிமர் பேட்டரிகள் உபயோகம் செய்யப்படுகிறது.
இவ்வகை பேட்டரிகளில் தனது கொள்ளளவை நினைவில் வைக்காது. அதற்கான கட்டாயமும் இல்லை. இதனால் இவ்வாறான பேட்டரிகள் உள்ள ஸ்மார்ட்போனை 8 மணிநேரம் சார்ஜ் செய்ய தேவையில்லை. நாம் சாதரணமாக உபயோகம் செய்யலாம். நாம் சார்ஜ் செய்யும் போது செல்போன் 100% என்ற நிலையை அடைய வேண்டாம்.
ஸ்மார்போனின் பேட்டரி வாழ்நாட்கள் (Battery Life) கணக்கீடை பொறுத்தமட்டில், அவை 0-வில் இருந்து 100 என்ற இலக்கை அடையும் நிகழ்வு Charging Cycle என்று அழைக்கப்படுகிறது. இது ஒவ்வொரு பேட்டரிக்கும் வேறுபாடும். ஒரு பேட்டரி தனது வாழ்நாட்களில் அனைத்து சுழற்சியையும் முடித்துவிட்டால், அது விரைவில் மடிந்துவிடும்.
போன் பேட்டரியை அதிக நாட்கள் நீடிக்கும் வகையில் செயல்படுத்த போனில் சார்ஜ் 20% க்கு கீழ் குறையும் போது சார்ஜில் போட வேண்டும். அது 95% என்ற இலக்கத்திற்கு வரும்போது, அதன் மின் இணைப்பை துண்டித்து சார்ஜில் இருந்து எடுத்துவிட வேண்டும். இதனால் சார்ஜிங் சுழற்சியை குறைக்கலாம். Corona Vaccine: கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் பக்கவிளைவு ஏற்படுகிறதா?.. ஐசிஎம்ஆர் பரபரப்பு பதில்..!
நமது செல்போனில் சார்ஜ் முற்றிலும் தீரும் வரை உபயோகம் செய்துவிட்டு, 1 மணிநேரத்தில் சார்ஜ் ஏறிவிடும் என 100% ஏறும் வரை சார்ஜில் போட்டு தொடர்ந்து உபயோகம் செய்து வந்தால், கட்டாயம் அது தனது சார்ஜிங் சுழற்சியை விரைவில் நிவர்த்தி செய்து காலாவதியாகிவிடும்.
எப்போதும் 20% என்ற பட்சத்தில் நமது செல்போனை சார்ஜில் போட்டு, 80% என வரும்போது அதனை எடுத்துவிடுவது பேட்டரியின் திறனை மேம்படுத்தும். வாழ்நாட்கள் நீடிக்க உதவும். இன்றளவில் உள்ள பேட்டரிகளை நாம் 8 மணிநேரம் சார்ஜ் போட்டால், அவை தனது செயல்திறனை இழக்கும் என்பதே நிதர்சனம்.
இன்றளவில் சந்தைகளில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில், சார்ஜிங் அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரி 90% சார்ஜ் ஏறும் வரை மின்சாரத்தை வேகத்துடன் ஈர்க்கும் ஸ்மார்ட்போன்கள், எஞ்சிய 10% மின்சாரத்தை பொறுமையுடன் ஏற்றுக்கொள்கிறது. இதனால் பேட்டரியின் திறனும் மேம்படுகிறது.
Tips:
- இரவு முழுவதும் சார்ஜ் ஏற்றுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
- சார்ஜ் ஏறும்போதே விடியோக்கள் பார்க்க கூடாது, கேம் விளையாட கூடாது.
- போன் சூடாக இருப்பதை உறுதி செய்தால், அதனை On என்ற நிலையில் வைத்தே சார்ஜ் ஏற்றக்கூடாது.
- நமது செல்போன் பேட்டரி சூடாகும் பட்சத்தில், அது விரைவில் தனது வாழ்நாட்களை குறைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- நாம் வாங்கும் செல்போனை பொறுத்து பேட்டரி தன்மை மாறும் என்பதால், எந்த பேட்டரிக்கு சார்ஜ் போடவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.
பேட்டரியும்-தாங்குதிறனும் (Battery Cycle Life):
- நிக்கல் காட்மியம் (Nickel Cadmium): 2000 முறைகள்.
- லித்தியம் பாலிமர் (Lithium Polymer): 300 - 500 முறைகள்.
- லித்தியம் (Lithium): 400 - 1,200 முறைகள்.
(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 18, 2023 11:15 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)