WhatsApp New Feature Update: வாட்சப் மெசேஜ்களை இனி ரகசிய பின் மூலமாக மறைக்கும் வசதி அறிமுகம்; வாட்சப் அதிரடி.!
பயனர்களின் தனிப்பட்ட கருத்துக்களை குறுஞ்செய்தி வாயிலாக பகிரவும், புகைப்படங்கள், வீடியோ அனுப்பவும் வாட்சப் உதவுகிறது.
நவம்பர் 13, சான் பிரான்சிஸ்கோ (Technology News): மெட்டா நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் வாட்சப் (WhatsApp) செயலி, சர்வதேச அளவில் 2.7 பில்லியன் மக்களால் உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்திய அளவில் 487 பில்லியன் வாட்சப் கணக்குகள் உள்ளன.
இவற்றில் போலியான மற்றும் மோசடி செயலுக்கு பயன்படுத்தப்படும் வாட்சப் சேவையும் அடங்கும் எனினும், அவை அவ்வப்போது பெறப்படும் புகார்களின் அடிப்படையில் வாட்சப் நிறுவனத்தால் நீக்கப்படும்.
பயனர்களின் தனிப்பட்ட கருத்துக்களை குறுஞ்செய்தி வாயிலாக பகிரவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ அனுப்பவும் பேருதவி செய்யும் வாட்சப், தொடர்ந்து தனது பயனர்களின் தேவைக்காக புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. New York Mayor Celebrates Diwali: அமெரிக்க வாழ் இந்துக்களுடன், கோவிலில் தீபாவளியை சிறப்பித்த நியூயார்க் மேயர்.!
இந்நிலையில், வாட்சப் அப்டேட் தொடர்பான தகவல்களை பகிரும் WABetaInfo-வில், வாட்ஸப்பில் புதிய அப்டேட் செயல்படுத்துவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயனர்கள் தங்களின் சாட்களை லாக் செய்துகொள்ளும் வசதியும், அதற்கு ரகசிய பாஸ்வேர்ட் பதிவிடும் அமைப்பும் வழங்கப்படும்.
சாட் லாக் செய்யப்பட்டு இருப்பின், அந்த பதிவுகளை யாரும் பார்க்க இயலாது. பாஸ்வோர்ட் பதிவிட்டால் மட்டுமே அவை பார்க்கும் வசதி இருக்கும். பயனர்கள் தேவைக்கேற்ப அதனை உபயோகம் செய்யலாம். இதனால் முக்கிய தகவல்களை பாதுகாப்புடன் பரிமாற உதவும்.
ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு முதலில் இச்சேவை சோதனைக்கு பின்னர் வழங்கப்படும்.